முயற்சிகள் வெற்றியடையும்
2025 ஜனவரி 21-ஆம் தேதி முதல் 2025 ஜனவரி 27-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
கிரகங்கள் நன்றாக உள்ளதால் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியடையும். நீங்கள் செய்ய நினைக்கும் காரண காரியங்கள் கைகூடும். நினைத்தது நடப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. நீங்கள் நம்பியவர்கள் ஏதோவொரு விதத்தில் உங்களுக்கு உண்மையாகவும், நேர்மையாகவும் இருப்பார்கள். கையில் பணம், தனம், பொருள், பண சுழற்சி ஆகியவை நன்றாகவே இருக்கிறது. வேலை, வாய்ப்புகளும் நன்றாக இருக்கிறது. விருப்பம், ஆசைகள் பூர்த்தியாகும். எந்த துறையில் பணியாற்றினாலும் ஏற்றம், முன்னேற்றம், புகழ், அந்தஸ்து உங்களுக்கு இருக்கிறது. சொந்த தொழில், கூட்டுத்தொழில் இரண்டுமே நன்றாக உள்ளது. கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புகழ், அந்தஸ்து கிடைக்கும். புதிதாக காதல் விஷயங்கள், அவற்றால் மகிழ்ச்சி சந்தோஷம் ஆகியவை உண்டு. நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள். குறிப்பாக பெண் நண்பர்களால் எதிர்பார்த்த நன்மைகளை அடைவீர்கள். நீங்கள் நினைப்பது அனைத்தும் நடப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. எதிர்பாராத பயணம்; அந்த பயணத்தால் நன்மை உண்டாகும். இந்த வாரம் முழுவதும், முருகன் மற்றும் விநாயகரை வழிபாடு செய்யுங்கள்.