வேலையில் கவனம்

Update: 2024-12-02 18:30 GMT

2024 டிசம்பர் 03-ஆம் தேதி முதல் டிசம்பர் 09-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

வேலை, வாய்ப்புகளில் கவனமாக இருக்க வேண்டும். உடல் உழைப்பு சார்ந்த வேலைகளில் கொஞ்சம் பொறுமையாகவும், நிதானமாகவும் இருக்க வேண்டிய காலகட்டங்கள். புரொமோஷன், போனஸ், இன்சென்டிவ் எது இல்லை என்றாலும் கவலை பட வேண்டாம். வேலை இருக்கிறதே என்று சந்தோஷப்படுங்கள். அதிகமான வேலைப்பளு, டென்ஷன் இருந்தாலும் அவற்றையும் பொறுமையாக கையாளுங்கள். பொருளாதார ரீதியான பிரச்சினைகள் ஏதும் இல்லை. கையில் பணம், தனம் இருந்தால் கூட செலவுகள்தான் அதிகமாக இருக்கிறது. யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். கடன் வாங்கியாவது அசையும், அசையா சொத்துக்கள் வாங்குவதற்கு வாய்ப்புகள் உள்ளன. உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புரொடக்சனுக்கு தகுந்த சேல்ஸ் இருக்கிறது. சொந்த தொழில் சுமார். கூட்டுத் தொழிலில் பார்ட்னர் லாபம் அடைவார். உயர்கல்வி நன்றாக உள்ளது. நீண்ட தூர பயணம் செல்ல திட்டமிடுவீர்கள். நல்ல நட்பு வட்டம் அபிவிருத்தியாகும். அவர்களால் மகிழ்ச்சி, சந்தோஷம் என்பது இருக்கும். மூத்த சகோதர - சகோதரிகள் இருந்தால் அவர்களால் ஏற்றம், முன்னேற்றம் அமைய வாய்ப்புகள் உண்டு. புதிய முயற்சிகள் எதுவும் செய்ய வேண்டாம். இந்த வாரம் முழுவதும், எங்கெல்லாம் சிவாலயங்கள் இருக்கிறதோ அங்கு சிவ தரிசனம் செய்யுங்கள். 

Tags:    

மேலும் செய்திகள்