காதல் மகிழ்ச்சி தரும்

Update:2024-10-29 00:00 IST

2024 அக்டோபர் 29-ஆம் தேதி முதல் நவம்பர் 04-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

புதிதாக சொத்துக்கள், நகைகள், ஆடைகள் வாங்க நிறைய வாய்ப்புகள் உள்ளன. ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்யும்போது கொஞ்சம் பார்த்து செய்யுங்கள். ஏனென்றால், ஷேரில் ரிட்டன்ஸ் கிடைப்பது போன்ற தோற்றம். ஆனால், அதில் நிறைய தடைகள், பிரச்சினைகள் என்பது இருக்கிறது. உங்கள் காதல் விஷயங்கள் ஏதொவொருவிதத்தில் மகிழ்ச்சி, சந்தோஷத்தை கொடுக்க வாய்ப்புகள் உள்ளன. சொந்த தொழில் சுமாராக இருந்தாலும், ஓரளவு லாபகரமாக இருந்துகொண்டே இருக்கும். வேலையை பொறுத்தவரை கவனம் செலுத்துங்கள்; பொறுமையாகவும், நிதானமாகவும் இருங்கள். எதிர்பாராத வகையில் விடுப்பு எடுக்க வாய்ப்புள்ளது. நண்பர்களால் வாழ்க்கையில் ஏற்றம், முன்னேற்றம் இருக்கிறது. அதனால் நண்பர்களுடன் நட்புறவை மேம்படுத்துங்கள். யாருக்கும் கடன் கொடுப்பதாக இருந்தால் யோசித்து கொடுங்கள். அது திரும்பி வருவதற்கான வாய்ப்புகள் இல்லை. இந்த வாரம் முழுவதும், மகாலட்சுமியை வழிபாடு செய்யுங்கள்.

Tags:    

மேலும் செய்திகள்