எதிர்பாராத செலவு
2024 டிசம்பர் 10-ஆம் தேதி முதல் டிசம்பர் 16-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
கல்வி நன்றாக உள்ளது. குறிப்பாக, உங்களின் வேலை வாய்ப்புகளில் கவனம் செலுத்துங்கள். கிரக நிலைகள் கடந்த வாரத்தை போன்று அப்படியே இருப்பதால் வேலையில் அழுத்தம் இருப்பதற்கான வாய்ப்புகள் நிறைய உள்ளன. எவ்வளவு முயற்சிகள் எடுத்து செய்தாலும் உங்களுக்கான அங்கீகாரம் கிடைப்பது குறைவுதான். அதனால், கிடைத்த வேலையை பொறுமையாகவும், நிதானமாகவும் செய்யுங்கள். உயர் அதிகாரிகள் சொல்வதை கேட்டு நடந்து கொள்ளுங்கள். உடன் பணியாற்றுபவர்களுடனும் விட்டுக்கொடுத்து செல்லுங்கள். வருமானங்கள் இருந்தாலும் அதற்கு ஏற்ற செலவினங்களும் இருக்கின்றன. காதலில் தடை, பிரச்சினைகள், பிரேக் அப் ஆகியவையும் இருக்கிறது. சொந்த தொழில் சுமார். கூட்டுத் தொழிலில் பார்ட்னருக்காக உழைப்பீர்கள். யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். எதிர்பாராத நிறைய சுப செலவினங்கள் இருக்கின்றன. நல்ல நட்பு உங்களை விட்டு பிரிந்து போவதற்கான வாய்ப்பு உள்ளது. இந்த வாரம் முழுவதும், வாய்ப்பு இருக்கும் போது சிவனையும், பெருமாளையும் வழிபாடு செய்யுங்கள்.