வேலையில் கவனம்

Update:2024-11-05 00:00 IST

2024 நவம்பர் 05-ஆம் தேதி முதல் நவம்பர் 11-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

உங்கள் நண்பர்களால் நற்பலன்கள், மகிழ்ச்சி உண்டு. பொருளாதார நிலைகளை பொறுத்தவரைக்கும் கையில் பணம், தனம் இருக்கிறது. சொத்துக்கள் வாங்குவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. வேலையை பொறுத்தவரை கொஞ்சம் கவனமாக இருங்கள். உங்கள் வேலையில் பண வரவும், தனவரவும் இருக்கிறது. வேலையில் அரியர்ஸ், போனஸ், இன்சென்டிவ் ஆகியவை வராமல் இருந்தால் இந்த வாரம் வரும். வேலையில் எல்லோரிடத்திலும் கொஞ்சம் விட்டுக்கொடுத்து செல்லுங்கள். காதல் விஷயங்கள் மகிழ்ச்சி, சந்தோஷத்தை கொடுக்கும். ஏதோவொரு விதத்தில் உங்களுக்கு அது நன்மையாக இருக்கும். சொந்த தொழில் சுமாராக இருப்பதால் அதில் ஏதும் முதலீடு செய்ய வேண்டாம். கூட்டுத்தொழிலில் பார்ட்னர் லாபம் அடைவார். நீங்கள் நஷ்டம் அடைவீர்கள். மணவாழ்க்கையை பொறுத்தவரை கணவன் - மனைவி உறவு சுமாராக இருக்கிறது. கருத்துவேறுபாடுகள், சின்ன சின்ன சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு விலகும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புகழ், அந்தஸ்து கிடைக்கும். பெரிய அளவில் ஷேர் மார்க்கெட், டிரேடிங், ஆன்லைன் பிசினஸ் செய்ய நினைப்பவர்கள் சுமாரான அளவில் செய்யுங்கள். கல்வி நன்றாக உள்ளது. எதிர்பாராத தெய்வ தரிசனம் இருக்கிறது. இந்த வாரம் முழுவதும், முருகனை பிரதானமாக வழிபாடு செய்யுங்கள்.

Tags:    

மேலும் செய்திகள்