முயற்சிகள் வெற்றியடையும்

Update:2024-07-30 00:00 IST

2024 ஜூலை 30-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 05-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

முயற்சிகள் வெற்றியடையும். எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் செய்திகள் உங்களுக்கு சாதகமாக வரும். நீங்கள் கையில் எடுக்கும் அத்தனை விஷயங்களும் உங்களுக்கு நன்மையாக இருக்கும். மனக்குழப்பங்கள் ஏற்படக்கூடிய காலகட்டமாக இருந்தாலும், இறைவனுடைய அனுகிரகங்கள் உங்களுக்கு கிடைக்கும். எப்போதெல்லாம் பிரச்சினைகள், போராட்டங்கள், மனக்குழப்பங்கள் இருக்கிறதோ அப்போதெல்லாம் அதை தீர்ப்பதற்கு யாராவது வருவார்கள். பேச்சின் மூலமாக வருமானத்தை சம்பாதிக்க வாய்ப்புகள் நிறைய உள்ளன. உங்களை அறியாத மகிழ்ச்சி, சந்தோஷம், என்டெர்டெயின்மென்ட் அதிகமாக இருக்கும். எதிர்பாராத டூர் அல்லது டிராவல் இருக்கும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புகழ், அந்தஸ்து கூடும். ஷேர் மார்க்கெட், டிரேடிங், மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் பிற யூக வணிகங்களில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் பொறுமையாகவும், நிதானமாகவும் இருங்கள். விட்டதை பிடிக்க ஆசைப்படாதீர்கள். கிரக நிலைகள் உங்களுக்கு சாதகமாக இல்லை. வேலையை பொறுத்தவரை பரவாயில்லை. பிரச்சினைகள் இருந்தாலும் வேலை நன்றாக உள்ளது. அவசரப்பட்டு பேப்பர் போடுவதோ, வேலை வேண்டாம் என்று எழுதி கொடுப்பதோ வேண்டாம். வேறு நல்ல வேலை கிடைக்கும்வரை பொறுமையாக இருங்கள். சொந்த தொழில் பரவாயில்லை. கூட்டுத்தொழிலில் பார்ட்னருக்காக உழைக்க வேண்டிய சூழ்நிலைகள் அல்லது அவரை விட்டு பிரிந்து இருக்க வேண்டிய காலங்கள் உள்ளன. இந்த வாரம் முழுவதும் சிவன் கோயிலில் இருக்கக்கூடிய அம்பாள் மற்றும் முருகனை வழிபாடு செய்யுங்கள். 

Tags:    

மேலும் செய்திகள்