தொழிலில் லாபம்

Update:2024-09-17 00:00 IST

2024 செப்டம்பர் 17-ஆம் தேதி முதல் செப்டம்பர் 23-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

நீங்கள் எடுக்கும் முயற்சிகள் நன்மையில் முடியும். நீங்கள் எதிர்பார்க்கும் செய்திகள் உங்களுக்கு சாதகமாக வரும். உங்களின் முயற்சிகள் பெரிய அளவில் இருந்தால் கண்டிப்பாக வெற்றியடைவீர்கள். ஏனென்றால் எதையும் துணிந்து செயல்படுத்துவதற்கான கிரக நிலைகள் இருக்கின்றன. வேலையை பொறுத்தவரை பரவாயில்லை. வேலையில் எண்ணிய எண்ணங்கள், முயற்சிகள், எடுக்கக் கூடிய செயல்பாடுகள் அனைத்தும் ஒர்க்-அவுட் ஆகும். வேலை நிமித்தமான முன்னேற்றம் கிடைக்கும். சொந்த தொழில் மற்றும் கூட்டுத்தொழில் இரண்டும் சிறப்பாகவும், லாபகரமாகவும் இருக்கும். மணவாழ்க்கையும் மகிழ்ச்சி, சந்தோஷத்தை கொடுக்கக்கூடியதாக இருக்கும். உங்களின் நட்பு வட்டாரம் நன்மையாக இருக்கும். நண்பர்களால் மகிழ்ச்சி, சந்தோஷம், வாழ்க்கையில் முன்னேற்றம் ஆகியவை இருக்கும். ஆராய்ச்சி தொடர்பான படிப்புகளை படிக்க நிறைய சந்தர்ப்பங்கள், வாய்ப்புகள் உண்டு. புதிய காதல் மலர்ந்து அந்த காதல் வெற்றியடைய வாய்ப்புள்ளது. இந்த வாரம் முழுவதும் முழுமுதற் கடவுள் விநாயகரையும், துர்க்கையையும் வழிபாடு செய்யுங்கள். 

Tags:    

மேலும் செய்திகள்