வேலையில் டென்ஷன்
2024 ஆகஸ்ட் 20-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 26-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
பொருளாதார நிலைகள் பரவாயில்லை. கையில் பணம், தனம் இருக்கும். பேச்சின் மூலமாக வருமானத்தை சம்பாதிப்பவர்களுக்கு நன்றாக உள்ளது. இடம், வீடு, வண்டி, வாகனம், வீட்டு உபயோகப்பொருட்கள் வாங்க நினைத்தவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் உள்ளன. கல்வி நன்றாக உள்ளது. அம்மாவின் அன்பு, ஆதரவு கிடைக்கும். ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் முதலீடு செய்யலாம். நல்லதொரு ரிட்டன்ஸ் கிடைக்கும். இதுதவிர, ரேஸ், லாட்டரி, மியூச்சுவல் பண்ட் ஆகியவற்றிலும் முதலீடு செய்ய வேண்டும் என்றால் குறைந்தபட்ச முதலீடே போதுமானது. அதுவே உங்களுக்கு நல்ல ரிட்டன்ஸை கொடுக்கும். கடன் வாங்கி முதலீடு செய்ய வேண்டாம். விட்டதை பிடிக்க ஆசைப்படாதீர்கள். கெரியரை பொறுத்தவரை கண்டிப்பாக வேலை என்பது இருக்கிறது. எந்த வேலை பார்த்தாலும் அந்த வேலையில் திருப்தியற்ற மனநிலை என்பது இருந்துகொண்டே இருக்கும். அதேபோன்று வேலையில் டென்ஷன், மன அழுத்தம் என்பதும் இருக்கும். சொந்த தொழில் மற்றும் மணவாழ்க்கை இரண்டும் சாதாரணமாக இருக்கிறது. உயர்கல்வியை தொடர நினைப்பவர்கள் தொடரலாம். இந்த வாரம் முழுவதும் துர்க்கை மற்றும் முருகனை வழிபாடு செய்யுங்கள்.