கடன் குறையும்

Update:2024-08-06 00:00 IST

2024 ஆகஸ்ட் 06-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 12-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

பொருளாதார ரீதியாக பிரச்சினைகள் ஏதும் இல்லை. கையில் பணம், தனம் இருக்கும். வேலையை பொறுத்தவரை பரவாயில்லை. வேறு வேலை மாற நினைப்பவர்களுக்கு அதற்கான சந்தர்ப்பங்கள் உள்ளது. பெரிய அளவில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியடையும். நீங்கள் எதிர்பார்க்கும் செய்திகள் உங்களுக்கு சாதகமாக வரும். கடன் அதிகமாக இருப்பவர்களுக்கு அது குறைய வாய்ப்புள்ளது. கிரக ரீதியாக நோயில் இருந்து விடுபடுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. உங்கள் மணவாழ்க்கை மகிழ்ச்சி, சந்தோஷகரமாக இருக்கும். சொந்த தொழில் சுமாராக இருக்கும். கூட்டுத்தொழிலில் பார்ட்னர் லாபம் அடைவார். நீங்கள் நஷ்டம் அடைவீர்கள். புதிய காதல் மலர வாய்ப்புள்ளது. அந்த காதல் வெற்றியடையும். தேவையில்லாமல் யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். அந்த பணம் திரும்பி வருவதற்கான வாய்ப்புகள் குறைவு. உங்கள் நட்பு வட்டாரம் பெரிய அளவில் கை கொடுப்பார்கள். நண்பர்களால் மகிழ்ச்சி சந்தோஷம், மூத்த சகோதர - சகோதரிகளால் நன்மைகள் உண்டு. வாய்ப்பு இருந்தால் ஏதாவது ஒன்றில் முதலீடு செய்யுங்கள். ஒருவேளை ஆடி மாதமாக இருக்கிறது என்று நினைப்பவர்கள் வீட்டு உபயோகப்பொருட்கள் வாங்குங்கள். அது தேவையில்லாத விரயம், வைத்தியச் செலவுகளை குறைக்கும். ஷேர் மார்க்கெட், டிரேடிங், ஆன்லைன் பிசினஸ் போன்றவற்றில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் கொஞ்சம் காத்திருங்கள். பெரிதாக லாபம் ஒன்றும் இல்லை. இந்த வாரம் முழுவதும் ஆஞ்சநேயர் மற்றும் சிவன் கோயிலில் பைரவரை வழிபாடு செய்யுங்கள். 

Tags:    

மேலும் செய்திகள்