நிறைய பாராட்டுக்கள் கிடைக்கும்

கோயில்களுக்குச் சென்று பூஜை செய்வது நல்லது. ஆன்மிகம் மற்றும் பக்தி சார்ந்த தூண்டுதல் அதிகமாக இருக்கும்.

Update: 2023-07-25 04:15 GMT

2023, ஜூலை 25 முதல் 31-ஆம் தேதி வரையிலான ராசிபலன்கள். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஆஞ்சநேயா.

உங்களைச் சுற்றியுள்ள அனைவரும் இந்த வாரம் முழுவதுமே அட்வைஸ் மழையைப் பொழிவர். அதேபோல் பாராட்டுக்களும் நிறைய கிடைக்கும். கணவன் - மனைவி இடையே உறவு நன்றாக இருக்கும். தனிப்பட்ட முறையிலும், வேலை காரணமாகவும் நிறைய இடங்களுக்கு பயணப்படுவீர்கள். குழந்தைகள், மாமனார் மற்றும் அப்பாவுடன் சண்டைகள் வரும். சிறு சிறு விஷயங்களில் குழந்தைகள் பெற்றோரின் பேச்சை கேட்கமாட்டார்கள். இது எரிச்சலூட்டும் வகையில் இருக்கும். கோயில்களுக்குச் சென்று பூஜை செய்வது நல்லது. ஆன்மிகம் மற்றும் பக்தி சார்ந்த தூண்டுதல் அதிகமாக இருக்கும். 27, 28, 29 ஆகிய தேதிகள் கடினமானதாக இருக்கும். குறிப்பாக அப்பாவுடன் சிறு சிறு மனஸ்தாபங்கள் ஏற்படலாம்.

Tags:    

மேலும் செய்திகள்