உடல் ஆரோக்கியத்தில் கவனம்
2024 ஆகஸ்ட் 06-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 12-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
நீங்கள் நினைப்பது அனைத்தும் நடக்கும். அதற்காக பெரிய அளவில் முயற்சி மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் வெற்றி பெற முடியும். போட்டித் தேர்வுகள், நேர்முகத் தேர்வுகளில் பங்கு பெற்றிருந்தால் வெற்றி பெற வாய்ப்புகள் உள்ளன. உங்களின் எண்ணங்கள், சிந்தனைகள் செயலாக்கம் பெரும். எதிர்பாராத பயணம், அந்த பயணத்தால் மகிழ்ச்சி, சந்தோஷம் இருக்கிறது. தேவையில்லாத குழப்பங்கள் வேண்டாம். கிரகங்கள் சாதகமாக இருக்கும் போது நாமும் அதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புரொடக்சனுக்கு தகுந்த விற்பனை மற்றும் லாபம் இருக்கிறது. அம்மாவின் அன்பு, ஆதரவை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு அது கிடைக்கும். உயர்கல்வியை தொடர நினைப்பவர்கள் தொடரலாம். வெளிநாட்டு தொடர்புகள் உங்களுக்கு சாதகமாக இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. பாஸ்போர்ட், விசாவுக்கு விண்ணப்பித்திருந்தால் அது வருவதில் தடைகள் இருக்கிறது. உங்களின் வேலையில் நிறைய பிரச்சினைகள், மனவருத்தங்கள், போராட்டங்கள் உண்டு. குறிப்பாக உங்களின் 4-ஆம் இடத்தில் ராகு சனியுடைய நட்சத்திரத்தில் இருப்பதால் எந்த வேலையில் இருந்தாலும் கவனம் செலுத்துங்கள். அப்பா மற்றும் உங்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். இந்த வாரம் முழுவதும் சிவன் மற்றும் பெருமாள் வழிபாடு செய்யுங்கள்.