பயணத்தால் வருமானம்

Update: 2024-09-09 18:30 GMT

2024 செப்டம்பர் 10-ஆம் தேதி முதல் செப்டம்பர் 16-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

பொருளாதாரத்தை பொறுத்தவரை வருமானம், சம்பாத்தியம் இருக்கிறது. லோனுக்கு விண்ணப்பித்திருந்தால் கிடைக்கும். அரசு, தனியார் என எந்த துறையில் பணியாற்றினாலும் வேலை பரவாயில்லை. சம்பள உயர்வு, பணி உயர்வு உள்ளிட்டவற்றை எதிர்பார்ப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் உள்ளன. யாருடைய பணமாவது உங்கள் கையில் இருக்கும். மணி ரொட்டேஷன் என்பது இருக்கும். குறிப்பாக பேச்சின் மூலமாக வருமானங்கள் உண்டு. நீங்கள் எடுக்கும் முயற்சிகள் உங்களுக்கு நன்மையாக அமையும். எதிர்பார்க்கும் செய்திகள் உங்களுக்கு சாதகமாக வரும். தேவையில்லாத மனக் குழப்பங்கள் வேண்டாம். நீங்கள் நினைப்பதை நேரடியாக செயல்படுத்துவதற்கான வாய்ப்பு கிரக ரீதியாக உள்ளது. எதிர்பாராத பயணம், அந்த பயணத்தால் நன்மை, குறிப்பாக வேலை நிமித்தமான அந்த பயணம் உங்களுக்கு மகிழ்ச்சியையும், வருமானத்தையும் கொடுக்கும். எந்த அளவுக்கு முயற்சி செய்கிறீர்களோ, அந்த அளவுக்கு வெற்றி கிடைக்கும் வாரமாக இருக்கும். வீடு, இடம், ஊர் மாற நினைப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் உண்டு. விற்பனையாகாத சொத்துக்கள் நல்ல விலைக்கு போகும். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு, உற்பத்திக்கு தகுந்த விற்பனை மற்றும் லாபம் இருக்கிறது. கல்வி நன்றாக உள்ளது. அம்மாவின் அன்பு, ஆதரவு முழுமையாக கிடைக்கும். உங்கள் காதல் விஷயங்கள் மகிழ்ச்சி, சந்தோஷத்தை கொடுக்கும். சொந்த தொழில் மற்றும் கூட்டுத்தொழில் இரண்டும் பரவாயில்லை. இந்த வாரம் முழுவதும் ஆஞ்சநேயரையும், சனி பகவானையும் வழிபாடு செய்யுங்கள்.  

Tags:    

மேலும் செய்திகள்