முயற்சிகள் வெற்றி பெறும்

Update:2024-09-03 00:00 IST

2024 செப்டம்பர் 03-ஆம் தேதி முதல் செப்டம்பர் 09-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

வேலை நன்றாக உள்ளது. அதில் நீங்கள் எடுக்கும் கடின முயற்சிகளுக்கான அங்கீகாரம் கிடைக்கும். சக ஊழியர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் உங்களுக்கு ஒத்துழைப்பு தருவார்கள். அதனால் துணிந்து சில முடிவுகளை எடுங்கள். நீங்கள் எடுக்கும் காரியங்கள் உங்களுக்கு நன்மையாக முடியும். எதிர்பார்க்கும் செய்திகள் உங்களுக்கு சாதகமாக வரும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். கல்வி நன்றாக உள்ளது. உங்கள் எண்ணங்கள் செயலாக்கம் பெரும். முயற்சிகள் வெற்றி பெறும். யாரையும் சந்தேக கண்கொண்டு பார்க்காதீர்கள். எந்தவொரு வேலையையும் நாளைக்கு என்று ஒத்தி வைக்காதீர்கள். ஏனென்றால் அந்த காரியத்தை உடனே செய்தால் வெற்றி கிடைக்கும். நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. நெருங்கிய நட்பு வட்டாரம் உங்களை விட்டு பிரிந்துபோகும். எது எப்படி இருந்தாலும் உங்களின் கௌரவம், அந்தஸ்து, புகழ், செல்வம், செல்வாக்கு கூடும். மூத்த சகோதர - சகோதரிகளால் உங்களுக்கு தேவையற்ற செலவினங்கள் இருக்கிறது. பி.ஆர், கிரீன் கார்டு, சிட்டிசன்ஷிப்புக்கு விண்ணப்பித்திருந்தால் வரும். கடனை குறையுங்கள். லோனுக்கு முயற்சிக்காதீர்கள். நோயின் தன்மை அதிகம் இருக்கும் என்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். இந்த வாரம் முழுவதும் ஆஞ்சநேயரையும், முருகனையும் வழிபாடு செய்யுங்கள். 

Tags:    

மேலும் செய்திகள்