முறிந்த காதல் சேரும்

Update: 2024-06-24 18:30 GMT

2024 ஜூன் 25-ஆம் தேதி முதல் ஜூலை 01-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

வெற்றிக்காக போராட வேண்டிய காலமாக இருக்கும் என்பதால் அனைத்து விஷயங்களிலும் கவனமாக இருங்கள். பொருளாதார நிலைகள் பரவாயில்லை. கையில் பணம், தனம் இருக்கும். முயற்சிகள் வெற்றியடையும். ஏதாவது ஒரு தகவல் அல்லது முக்கியமான செய்தியை எதிர்பார்த்து காத்திருந்தால் அது உங்களுக்கு சாதகமாக வந்து சேரும். எதிர்பாராத பயணம், அந்த பயணத்தால் நன்மை ஆகியவை ஏற்பட வாய்ப்புள்ளது. சொத்துக்களை வாங்கவும், விற்கவும் வாய்ப்புள்ளது. விவசாயம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு நல்ல மகசூல், லாபம் இருக்கிறது. எந்த வேலையில் இருந்தாலும் உங்கள் வேலையை திருப்திகரமாக செய்யுங்கள். தனிப்பட்ட வாழ்க்கை குறித்து யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். காதல் விஷயங்கள் மகிழ்ச்சி, சந்தோஷத்தை கொடுக்கும். முறிந்த காதல் மீண்டும் சேரும். குடும்பத்தில் சுபகாரியங்கள், சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். எதிர்பாராத டூர், டிராவல் இருக்கிறது. சொந்த தொழில் சுமார். வாரம் முழுவதும் நரசிம்மரையும், சிவபெருமானையும் பிரதானமாக வணங்கி வாருங்கள். 

Tags:    

மேலும் செய்திகள்