தனுசு - நண்பர்களால் மகிழ்ச்சி

Update: 2024-01-22 18:30 GMT

2024 ஜனவரி 23 முதல் ஜனவரி 29-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

மகிழ்ச்சி, சந்தோஷம் உண்டாகும். எதிர்பாராத தெய்வ தரிசனம், ஆலய தரிசனம் அமையும். சமுதாயத்தில் பெயர், அந்தஸ்து, புகழ் கூடும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். எந்த ஒரு செயலையும் துணிந்து செய்வீர்கள். யோசித்து செயல்படுவது நல்லது. தைரியம், தன்னம்பிக்கை வேண்டும். உற்பத்தி துறையில் இருப்பவர்களுக்கு தயாரிப்புக்கு தகுந்த விற்பனை இருக்கும். அம்மா மற்றும் உங்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். குழந்தை பாக்கியம் உண்டாகும். வேலையில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். சொந்த தொழில் சுமாராக உள்ளது. உயர் கல்வியை தொடரலாம். நண்பர்களால் மகிழ்ச்சி உண்டாகும். விநாயகர் மற்றும் முருகன் தரிசனம் ஏற்றத்தை தரும்.

Tags:    

மேலும் செய்திகள்