எதிரிகளை வெற்றி கொள்வீர்கள்

Update:2025-04-29 00:00 IST

2025 ஏப்ரல் 29-ஆம் தேதி முதல் 2025 மே 05-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர். 

வேலை, தேர்வு, இண்டெர்வியூ ஆகியவற்றில் வெற்றி வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கிறது. நீங்கள் எதிர்பார்க்கும் செய்தி வந்து சேரும். நேரடியான, மறைமுகமான எதிரிகளை வெற்றி கொள்வீர்கள். வழக்குகள் இருந்தால் விடுபடுவீர்கள் அல்லது ஜெயிப்பீர்கள். கடன் கிடைக்கும். நல்ல வேலையாட்கள் அமைவார்கள். நோயின் தன்மை அதிகமாக இருக்கும் என்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புரொடக்‌ஷனுக்கு தகுந்த நல்ல விற்பனை, லாபம் இருக்கிறது. விவசாயத்திலும் நல்ல மகசூல், லாபம் இருக்கிறது. அம்மாவுடைய அன்பு, ஆதரவு கிடைக்கும். அவசரம், அவசியம் என்றால் மட்டும் கடன் வாங்குங்கள். தேவையில்லாத விஷயங்களில் தலையிடாதீர்கள். அதனால் பிரச்சினைகள் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த வாரம் முழுவதும், விநாயகர் மற்றும் நரசிம்மரை வழிபாடு செய்யுங்கள்.

Tags:    

மேலும் செய்திகள்