புதிய முயற்சிகள் வேண்டாம்

Update:2025-04-01 00:00 IST

2025 ஏப்ரல் 01-ஆம் தேதி முதல் 2025 ஏப்ரல் 07-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

ஏதாவது ஒரு வேலை கண்டிப்பாக இருக்கிறது. ஆனால், நீங்கள் எந்த துறையில் பணியாற்றினாலும் தடைகள், போராட்டம், டென்ஷன், அழுத்தம் ஆகியவை இருக்கிறது. வெளியில் சொல்லமுடியாத பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் மிக கவனம் தேவை. பொருளாதார நிலைகள் சுமார். எவ்வளவு வருமானங்கள் வந்தாலும் செலவினங்கள், விரயம், நஷ்டம், வைத்தியச் செலவுகள் கணவன் அல்லது மனைவி இருவரில் யாராவது ஒருவருக்கு இருந்துகொண்டே இருக்கும். புதிய முயற்சிகள் எதுவும் வேண்டாம். உங்களின் சொந்த தொழில் லாபத்தை கொடுப்பது மாதிரியான தோற்றம். ஆனால், லாபம் இல்லை. வழக்குகள் இருந்தால் அதை தள்ளி வையுங்கள். நேரடியான, மறைமுகமான எதிரிகள் தொல்லை, போராட்டங்கள், பிரச்சினைகள் உண்டு. வேலை, வாய்ப்புகளில் கவனம் செலுத்துங்கள். பணி உயர்வு, சம்பள உயர்வு, இன்சென்டிவ், போனஸ் போன்ற எதுவும் கிடைக்கவில்லை என்றாலும் வருத்தப்படாதீர்கள். அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருந்தால் இந்த வாரத்தில் செய்து விடுங்கள். தேவையில்லாத எந்த விஷயங்களிலும் தலையிடாதீர்கள். இந்த வாரம் முழுவதும் பிரம்ம தேவர் மற்றும் விநாயகரை வழிபாடு செய்யுங்கள். 

Tags:    

மேலும் செய்திகள்