மனக் குழப்பங்கள் வேண்டாம்

Update:2025-02-25 00:00 IST

2025 பிப்ரவரி 25-ஆம் தேதி முதல் 2025 மார்ச் 03-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

எந்த துறையில் எப்படிப்பட்ட வேலையில் இருந்தாலும் உங்கள் வேலையில் கவனம் செலுத்துங்கள். ஏனென்றால் நீங்கள் பார்க்கும் வேலையை விட்டு வெளியேற வேண்டிய காலம் அல்லது வெளியேற்றப்பட வேண்டிய சூழல்கள் உருவாகும். வேலையை பற்றி ஒரு பயம், குழப்பம் ஏற்படுவதற்கான வாரமாக இருக்கிறது. உங்கள் உழைப்பு மற்றவர்களுக்கு லாபம், உங்களுக்கு பிரயோஜனம் இல்லை. உங்கள் பணம், பொருள் மொத்தமாக முடங்கிக் கொள்ளும் அல்லது மாட்டிக்கொள்ளும். புதிய முயற்சிகள் எதுவும் வேண்டாம். உறவுகளால் தேவையற்ற மன வருத்தங்கள், பிரச்சினைகள் இருக்கிறது. அவசரம், அவசியம் இருந்தால் தவிர பயணத்தை தவிருங்கள். தேவையில்லாத மனக் குழப்பங்கள் வேண்டாம். உயர் கல்வியில் தடை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. அப்பாவின் அன்பு, ஆதரவு கிடைக்கும். பேச்சின் மூலமாக வருமானத்தை சம்பாதிப்பவர்களுக்கு ஏற்றம் உள்ளது. வேலை மற்றும் தொழில் இரண்டும் சுமாராக உள்ளது. தொழிலில் யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். இந்த வாரம் முழுவதும், விநாயகரை தரிசனம் செய்யுங்கள். பைரவர் வழிபாட்டை அதிகப்படுத்துங்கள். 

Tags:    

மேலும் செய்திகள்