குழப்பம் வேண்டாம்
2025 பிப்ரவரி 11-ஆம் தேதி முதல் 2025 பிப்ரவரி 17-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
எந்த துறையில் பணியாற்றினாலும், வேலையில் பொறுமை, நிதானம் மற்றும் கவனமாக இருங்கள். உங்களின் உயர் அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு கொடுங்கள். சொல்வதை கேளுங்கள். அரசியல் சார்ந்த துறைகளில் இருப்பவர்கள் அடக்கி வாசியுங்கள். உங்கள் எதிரிகளால் தேவையற்ற பிரச்சினைகள், மனவருத்தங்கள் இருக்கின்றன. கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புகழ், அந்தஸ்து கிடைக்கும். ஆனால், வருமானங்கள் சுமார். ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் அடக்கி வாசியுங்கள். லாபத்தை கொடுப்பது மாதிரியான தோற்றம். லாபம் இல்லை. டிரேடிங், ஆன்லைன் பிசினஸ், மியூச்சுவல் ஃபண்ட், பிட்காயின்ஸ், கிரிப்டோ கரன்சி அத்தனையும் இந்த வாரம் சுமார். உழைத்து சம்பாதிப்பதற்கான வாய்ப்பை உருவாக்குங்கள். தொழிலும் சுமாராக உள்ளது. பணம், பொருள் முடங்க வாய்ப்பு உள்ளது. மணவாழ்க்கை சுமார். வெளிநாட்டு வாழ்க்கை, வெளிநாட்டு தொடர்புகள் பரவாயில்லை. புதிய காதல் மலர வாய்ப்புள்ளது. முறிந்த காதல் சேரும். உங்கள் காதலால் மகிழ்ச்சி, சந்தோஷம் அத்தனையும் இருக்கிறது. தேவையில்லாத குழப்பங்கள் வேண்டாம். இந்த வாரம் முழுவதும், விநாயகர் மற்றும் சிவனை தரிசனம் செய்யுங்கள்.