எல்லாவற்றிலும் கவனம்
2025 மார்ச் 18-ஆம் தேதி முதல் 2025 மார்ச் 24-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
ஒருபக்கம் வேலை இருக்கிறது. இன்னொரு பக்கம் வேலையில் அழுத்தங்கள், வருத்தங்கள், வெளியில் சொல்ல முடியாத பிரச்சினைகள் இருக்கிறது. இந்த வேலையை பார்ப்போமா அல்லது விட்டுவிடுவோமா என்று யோசிக்க வேண்டிய வாரமாகவும் இருக்கும். அதனால், உங்கள் வேலையில் கவனமாக இருங்கள். அவசரம், அவசியம் இருந்தால் தவிர லோன் வாங்காதீர்கள். காதல் விஷயங்கள் வெற்றியடைவது போன்ற தோற்றம். அதிலும் நிறைய பிரச்சினைகள், தடைகள் இருக்கிறது. இருந்தாலும், மணவாழ்க்கையில் மகிழ்ச்சி, காதலில் வெற்றி, பிரிந்த காதல் மீண்டும் ரீயூனியன் ஆவதற்கான வாய்ப்பு ஆகிய அத்தனையும் உள்ளது. ஷேர் மார்க்கெட், டிரேடிங் ஆகியவற்றில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் அடக்கி வாசியுங்கள். லாட்டரி, ரேஸ் போன்றவற்றில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் கொஞ்சம் பொறுமை, நிதானமாக இருங்கள். தொழிலும் சுமாராக உள்ளது. உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புரொடக்ஷனுக்கு தகுந்த சேல்ஸ் இருக்கிறது. வருமானங்கள் இல்லை. புதிய முயற்சிகள் எதுவும் பெரிய அளவில் வேண்டாம். தெய்வ அனுகூலத்தை கூட்டுங்கள். இந்த வாரம் முழுவதும் விநாயகர் மற்றும் சிவன் கோயிலில் இருக்கக்கூடிய பிரம்மாவையும் வழிபாடு செய்யுங்கள்.