எதிரிகளிடம் கவனம்

Update:2025-03-11 00:00 IST

2025 மார்ச் 11-ஆம் தேதி முதல் 2025 மார்ச் 17-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

உங்களை அறியாத மகிழ்ச்சி, சந்தோஷம், எண்டெர்டெயின்மெண்ட் இருக்கும். எதிர்பாராத டூர் அல்லது டிராவல் இருக்கிறது. குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். உங்கள் காதல் வெற்றியடையும். ஏற்கனவே உங்கள் காதல் பிரேக் அப் ஆகி இருந்தால் மீண்டும் ரீ யூனியன் ஆகும். கிரக நிலைகள் சாதகமாக இல்லாததால் யூக வணிகங்கள் எதுவும் வேண்டாம். வேலையில் நீங்கள் எதிர்பார்த்த முன்னேற்றம் இருக்கிறது. பணி உயர்வு, சம்பள உயர்வு, இன்சென்டிவ் ஆகியவற்றுக்கு வாய்ப்பு உள்ளது. உங்கள் எதிரிகள் விஷயத்தில் கவனமாக இருங்கள். அவர்களை ஜெயிப்பது மாதிரியான ஒரு தோற்றம். ஆனால், எதிரிகளால் தேவையற்ற பிரச்சினைகள், போராட்டங்கள் இருக்கிறது. உடல் ரீதியான பிரச்சினைகள் ஏற்பட்டு விலகும். பெரிய அளவில் தொழில் செய்பவர்கள் கொஞ்சம் பொறுமையாகவும், நிதானமாகவும் இருங்கள். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புரொடக்சனுக்கு தகுந்த சேல்ஸ் இருக்கிறது. லாபம் இல்லை. எல்லாவகையிலும் பொறுமையாகவும், நிதானமாகவும் இருக்க வேண்டிய காலகட்டமாக இருக்கிறது. இந்த வாரம் முழுவதும் சிவன் கோயிலில் இருக்கக்கூடிய பிரம்ம தேவர் வழிபாடு மற்றும் விநாயகரை தரிசனம் செய்யுங்கள். 

Tags:    

மேலும் செய்திகள்