உடல் ஆரோக்கியத்தில் கவனம்
2025 மார்ச் 25-ஆம் தேதி முதல் 2025 மார்ச் 31-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
போராடித்தான் அத்தனை வெற்றிகளையும் பெற வேண்டிய வாரமாக உள்ளது. அவசரம், அவசியம் இருந்தால் தவிர கடன் வாங்காதீர்கள். தேவையற்ற கடன்களை தவிர்த்துவிடுங்கள். வழக்குகள் இருந்தால் அதனை தள்ளிப்போடுங்கள். ஏனென்றால் ஜெயிப்பது போன்ற தோற்றம். ஆனால் ஜெயிக்க வாய்ப்பில்லை. உடல் ஆரோக்கியத்தில் மிக கவனம். அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருந்தால் செய்துகொள்ளுங்கள். வரவுகளுக்கு தகுந்த செலவுகள் இருக்கிறது. கணவன் - மனைவி இருவரில் யாராவது ஒருவருக்கு தேவையில்லாத செலவினங்கள், விரயங்கள், நஷ்டங்கள், வைத்தியச் செலவுகள் இருக்கிறது. லோன் வாங்கி வீடு, இடம், வீட்டு உபயோகப்பொருட்கள், பழைய பொருட்களை கொடுத்து புதியது ஆகியவை வாங்க வாய்ப்புள்ளது. தொழிலில் கவனம் செலுத்துங்கள். தேவையற்ற விஷயங்கள் எதிலும் தலையிடாமல் இருப்பது நல்லது. இந்த வாரம் முழுவதும் சிவன் கோயிலில் இருக்கக்கூடிய பிரம்ம தேவர் மற்றும் முழுமுதற் கடவுள் விநாயகரை வழிபாடு செய்யுங்கள்.