அடக்கி வாசியுங்கள்

Update: 2024-12-23 18:30 GMT

2024 டிசம்பர் 24-ஆம் தேதி முதல் டிசம்பர் 30-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

கல்வி நன்றாக உள்ளது. அம்மாவால் ஆக வேண்டிய காரியங்கள் நடக்கும். வீட்டு உபயோகப்பொருட்கள், வண்டி, வாகனங்கள் வாங்குவதற்கான வாய்ப்பு உள்ளது. பொருளாதார நிலைகள் பரவாயில்லை. கையில் பணம், தனம் இருக்கிறது. உங்கள் முயற்சிகள் சுமாரான அளவில் இருப்பதால் பெரிய முயற்சிகள் எதுவும் வேண்டாம். புதிய வாய்ப்புகள் வந்தால் யோசித்து செயல்படுங்கள். உங்கள் காதல் விஷயங்கள் மகிழ்ச்சி, சந்தோஷத்தை கொடுக்கும். அந்த காதல் வெற்றியடைந்து திருமணத்தில் முடியும். பெரிய அளவில் உழைத்தால் மட்டும்தான் நீங்கள் நினைத்ததை அடைய முடியும். எதிர்பாராத என்டெர்டெயின்மெண்ட், டூர், டிராவல் இருக்கிறது. நோயில் இருந்து விடுபடுவீர்கள். கடன் கிடைக்குதே என்பதற்காக வாங்காதீர்கள். குறிப்பாக உங்கள் வேலையில் கவனம் செலுத்துங்கள். எந்த துறையில் பணியாற்றினாலும் உங்கள் வேலையில் கவனம் செலுத்தினால்தான் வெற்றிபெற முடியும். எது எப்படி இருந்தாலும் உங்கள் புகழ், அந்தஸ்து, செல்வம், செல்வாக்கு, கீர்த்தி காப்பாற்றப்படும். ஆண் நண்பர்களால் மகிழ்ச்சி, சந்தோஷம் இருக்கிறது. இந்த வாரத்தில் எல்லா விஷயங்களிலும் அடக்கி வாசியுங்கள். இன்னும் நன்மைகள் கிடைக்கும். வாரம் முழுவதும், பிரம்மா மற்றும் விநாயகரை வழிபாடு செய்யுங்கள்.  

Tags:    

மேலும் செய்திகள்