புதிய காதல் மலரும்

Update:2024-11-05 00:00 IST

2024 நவம்பர் 05-ஆம் தேதி முதல் நவம்பர் 11-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

நீங்கள் எதிர்பார்த்த செய்திகள் எதுவாக இருந்தாலும் உங்களுக்கு சாதகமாக வரும். பிறருக்கு நீங்கள் கொடுத்த பணம் வரும். ஆனால், குறைவாக வரும். அரியர்ஸ், பென்ஷன், இன்சூரன்ஸ் ஆகிய வராத பணங்கள் உங்கள் கையில் வருவதற்கான வாய்ப்புகள் நிறைய உண்டு. நீங்கள் எடுக்கும் முயற்சிகளால் நற்பலன்கள் கிடைக்கும். உங்களை பெரிய அளவில் புதுப்பித்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள். உங்களின் திட்டங்கள் பெரிய அளவில் இருக்கும். அதை எப்படி வெற்றிகரமாக கொண்டு செல்கிறீர்கள் என்பதில்தான் எதிர்காலமே இருக்கிறது. உங்கள் முயற்சிகளில் ஒருசில சறுக்கல்கள், தடைகள், தடங்கல்கள் இருந்தாலும் எந்த அளவுக்கு முயற்சி செய்கிறீர்களோ அந்த அளவுக்கு வெற்றி உண்டு. காதல் விஷயங்கள் மகிழ்ச்சி, சந்தோஷத்தை கொடுக்கும். புதிய காதல் மலர வாய்ப்புள்ளது. அந்த காதல் வெற்றிபெற்று திருமணத்தில் முடியும். திருமணம் நடக்காதவர்களுக்கும் திருமணம் நடைபெறும். பிசினஸ் நன்றாக இருக்கும். ஸ்டார்ட் அப் நிறுவனம், இண்டஸ்ட்ரியல் தொடங்க நினைப்பவர்கள் அதற்கான பணிகளை செய்யலாம். உங்கள் திருமண வாழ்க்கை திருப்தியற்ற நிலையில்தான் இருக்கிறது. உங்கள் வேலையில் கவனம் செலுத்துங்கள். வேலையில் நீங்கள் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைத்தால் கூட சின்ன சின்ன தடைகள் இருக்கிறது. அதனால் கொஞ்சம் விட்டுக்கொடுத்து போங்கள். உங்கள் கடின முயற்சிக்கான அங்கீகாரம் கிடைக்கும். ஏதாவது ஒன்றில் முதலீடு செய்வதாக இருந்தாலும் செய்யுங்கள். இந்த வாரம் முழுவதும் சிவன் கோயிலில் இருக்கக்கூடிய பிரம்மாவை வழிபாடு செய்யுங்கள். 

Tags:    

மேலும் செய்திகள்