முயற்சிகள் வேண்டாம்

Update:2024-09-03 00:00 IST

2024 செப்டம்பர் 03-ஆம் தேதி முதல் செப்டம்பர் 09-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

கையில் பணமிருந்தால் ஏதாவது ஒன்றில் முதலீடு செய்யுங்கள். இல்லையென்றால் கணவன் அல்லது மனைவி இருவரில் யாராவது ஒருவருக்கு தேவையில்லாத செலவினங்கள், வைத்தியச் செலவுகள் இருக்கிறது. வெளிநாட்டு தொடர்புகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். கல்வி மற்றும் வேலை தொடர்பாக வெளிநாடு போக நினைப்பவர்கள் அதற்கான வேலையை தொடங்குங்கள். பாஸ்போர்ட், விசாவுக்கு விண்ணப்பித்திருந்தால் வரும். ஒன்றிற்கும் மேற்பட்ட தொழில் செய்பவர்களுக்கு சுமார். அப்பாவின் அன்பு, ஆதரவு எதிர்பார்ப்பவர்களுக்கும் சுமாராக இருக்கும். வேறு வேலைக்காக நீங்கள் முயற்சி செய்வதை பொறுத்துதான் உங்கள் வேலை எப்படி இருக்கும் என்பது தெரியும். காதல் விஷயங்களிலும் நிறைய தடைகள் இருந்து கொண்டே இருக்கிறது. ஒரு பக்கம் உங்கள் காதல் வெற்றியடைவது போன்ற ஒரு தோற்றம், இன்னொரு பக்கம் அந்த காதலில் பிரச்சினைகள் இருந்துகொண்டே இருக்கிறது. குழந்தைகளுக்காக செலவு செய்வீர்கள். அவர்களை விட்டு பிரிந்து இருப்பீர்கள். உங்கள் உழைப்பு மற்றவர்களுக்கு லாபம். உங்களுக்கு பிரயோஜனம் இல்லை. உங்கள் பணம், பொருள் பறிபோக வாய்ப்புகள் உள்ளன. உங்கள் எண்ணம், ஆசை, அபிலாஷைகள் பூர்த்தியாவது மாதிரியான வாய்ப்பு உள்ளது. ஆனால் அவற்றிலும் நிறைய தடைகள் என்பது இருக்கிறது. இந்த வாரத்தில் பெரிய முயற்சிகள் எதுவும் வேண்டாம். எல்லாவற்றிலும் தடைகள் இருப்பதால் பொறுமையும், நிதானமும் அவசியம். இந்த வாரம் முழுவதும் முருகனையும், சிவனையும் வழிபாடு செய்யுங்கள்.

Tags:    

மேலும் செய்திகள்