முறிந்த காதல் சேரும்
2024 டிசம்பர் 17-ஆம் தேதி முதல் டிசம்பர் 23-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
சொத்து, வண்டி, வாகனங்கள், வீட்டு உபயோகப்பொருட்கள் வாங்க வாய்ப்புள்ளது. திருப்தியற்ற மனநிலையில் இருந்தால் அவற்றையெல்லாம் மாற்றுங்கள். காதல் வெற்றி பெறும். முறிந்த காதல் மீண்டும் சேரும். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு அது குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெறும். அப்பாவின் அன்பு, ஆதரவு கிடைக்கும். வெளியூர், வெளிநாட்டில் முதலீடு செய்ய வாய்ப்புள்ளது. தொழிலை விரிவுபடுத்தும் எண்ணம் இருந்தால் அடக்கி வாசியுங்கள். வேலை கிடைப்பது மாதிரியான ஒரு தோற்றம். ஆனால், வேலையை விட்டு வெளியே வரவேண்டும் அல்லது வெளியேற்றப்பட வேண்டிய காலகட்டம் என இரண்டும் கலந்து உள்ளது. வீடு, இடம் மாற்றங்கள் உண்டு. சொத்துக்களை விற்பதற்கான வாய்ப்புகள் நிறைய உள்ளன. எதிர்பாராத பயணம் அதிலும், வெளியூர், வெளிநாடு, தூர தேசம் பயணம் செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த வாரம் முழுவதும், விநாயகர் மற்றும் பிரம்ம தேவரை வழிபாடு செய்யுங்கள்.