உறவுகளால் பிரச்சினை

Update:2024-07-16 00:00 IST

2024 ஜூலை 16-ஆம் தேதி முதல் ஜூலை 22-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

உங்களை அறியாத மகிழ்ச்சி, சந்தோஷம், இருந்து கொண்டே இருக்கும். எதிர்பாராத டூர் அல்லது டிராவல் உண்டு. பொருளாதார நிலைகளை பொறுத்தவரையில் கையில் பணம், தனம், பொருள் என்பது இருக்கும். பேச்சின் மூலமாக வருமானத்தை சம்பாதிப்பீர்கள். பெரிய அளவில் முயற்சிகள் ஏதும் வேண்டாம். அவை வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் இல்லை. இளைய சகோதர - சகோதரிகள் மற்றும் நெருங்கிய உறவுகளால் தேவையற்ற பிரச்சினைகள், மனவருத்தங்கள் உண்டு. கல்வியில் கவனம் செலுத்துங்கள். காதல் விஷயங்கள் ஒருபுறம் மகிழ்ச்சி, சந்தோஷத்தை கொடுத்தாலும் இன்னொரு புறம் உங்கள் காதல் பிரேக் அப் ஆவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எல்லாமே மாறி மாறி இந்த வாரம் இருக்கிறது. ஷேர் மார்க்கெட், டிரேடிங், ஆன்லைன் பிசினஸ், மியூச்சுவல் பண்ட் போன்ற எந்த வணிகங்களிலும் முதலீடு செய்ய வேண்டாம். குறிப்பாக கிரிப்டோ காயின், கிரிப்டோ கரன்சி ஆகியவற்றில் முதலீடு செய்ய வேண்டாம். வேலையில் எல்லோரையும் அனுசரித்து செல்ல வேண்டிய நிலையில் கிரக நிலைகள் இருப்பதால் கவனமாக இருங்கள். இல்லையென்றால் தேவையில்லாத பிரச்சினைகள், போராட்டங்கள் இருக்கிறது. யாருக்கும் தேவையில்லாமல் கடன் கொடுக்காதீர்கள். அவை திரும்பி வருவதற்கான வாய்ப்புகள் இல்லை. உயர் கல்வியில் தடைகள் இருக்கிறது. இந்த வாரம் முழுவதும் விநாயகர் மற்றும் சிவன் கோயிலில் இருக்கக்கூடிய பிரம்மதேவரை வழிபாடு செய்யுங்கள். 

Tags:    

மேலும் செய்திகள்