சந்தோஷம் நிறைந்திருக்கும்

Update: 2024-01-01 18:30 GMT

2024 ஜனவரி 2 முதல் ஜனவரி 8-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

உங்களை அறியாத மகிழ்ச்சி ஏதோவொரு வகையில் ஏற்படும். வேலை சிறப்பாக உள்ளது. வருமானம் இருக்கும் அளவிற்கு செலவுகளும் வந்து சேரும். சுழற்சி முறையில் வந்து சேர வேண்டிய பணவரவு வந்துவிடும். தைரியம் மற்றும் தன்னம்பிக்கை கிடைக்கும். நம்பியவர்களால் நற்பலன்கள் உண்டு. நீங்கள் எதிர்பார்த்த செய்திகளும் பெரிய அளவில் இருக்கும். விவசாயம் சார்ந்த தொழில்களில் இருப்பவர்களுக்கு ஏற்றம் இருக்கும். ஷேர் மார்க்கெட், ரேஸ் அல்லது லாட்டரி வாங்குபவர்கள், ஆன்லைன் தொழிலில் இன்வெஸ்ட்மென்ட் செய்பவர்கள், டிஜிட்டல் கரன்சி வாங்குபவர்கள் ஆகியோருக்கு சிறப்பாக இருக்கும். உங்களது திருமண வாழ்க்கை மற்றும் சொந்த தொழிலும் நன்றாக உள்ளது. சந்தோசமாக இருப்பதற்கான வாய்ப்புகள் நிறையவே உள்ளன. விநாயகர் மற்றும் சிவன் தரிசனம் முன்னேற்றத்தை தரும். 

Tags:    

மேலும் செய்திகள்