புது காதல் மலரும்
By : ராணி
Update:2024-01-16 00:00 IST
2024 ஜனவரி 16 முதல் ஜனவரி 22-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
இளைய சகோதர - சகோதரிகள் மற்றும் நெருங்கிய நண்பர்களுக்காக செலவு செய்யுங்கள். பொருளாதாரத்தை பொறுத்தவரையில் பரவாயில்லை. முயற்சிகள் வெற்றியடையும். தைரியம் மற்றும் தன்னம்பிக்கை கூடும். நீங்கள் கையில் எடுக்கும் விஷயங்கள் அனைத்தும் சாதகமாக அமையும். நினைப்பதெல்லாம் நடக்கும். நிலம், வீடு வாங்கவும், இடம்பெயர்ந்து செல்லவும் ஏற்ற சூழல்கள் உள்ளன. புது காதல் மலரும். ஏற்கனவே காதலிப்பவர்களின் வாழ்க்கை திருமணத்தில் முடியும். வேலையில் பிரச்சினைகள் இருக்கும். தொழில் நன்றாக உள்ளது. உங்களுடைய வெளிநாட்டு தொடர்புகள் சாதமாக அமையும். விநாயகர், துர்க்கை மற்றும் காளி வழிபாடு ஏற்றத்தை தரும்.