புதிய காதல் மலரும்

Update: 2024-07-08 18:30 GMT

2024 ஜூலை 09-ஆம் தேதி முதல் ஜூலை 15-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

உங்களின் விருப்பம், எண்ணம், ஆசை, அபிலாஷை அனைத்தும் பூர்த்தியாகும். கௌரவம், அந்தஸ்து கூடும். அரசாங்கத்தால் ஏதாவது காரியம் ஆக வேண்டும் என்றால் அது இந்த வாரம் நடக்கும். பெரிய அளவில் ஸ்டார்ட் அப் நிறுவனம், இண்டஸ்ட்ரியல் தொடங்க நினைப்பவர்கள் உடனே துவங்கி அதற்கான வேலைகளில் இறங்குங்கள். அதற்கான வாய்ப்புகள், சந்தர்ப்பங்கள் நன்றாக உள்ளது. திருமண வாழ்க்கையை பொறுத்தவரை ஓரளவுக்கு மகிழ்ச்சி, சந்தோஷம் உண்டு. சொந்த தொழில் பரவாயில்லை. கூட்டுத்தொழிலில் பார்ட்னர் லாபம் அடைவார். உங்களின் முயற்சிகள் ஆரம்பத்தில் தடையாக இருந்தாலும் இறுதியில் வெற்றி பெறும். இளைய சகோதர - சகோதரிகளால் மன நிம்மதியற்ற சூழ்நிலைகள் ஏற்படும். நெருங்கிய உறவினர்களால் தேவையற்ற மன குழப்பங்கள் உண்டாகும். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புரொடக்சனுக்கு தகுந்த விற்பனை இருக்கிறது. அம்மாவின் அன்பு, ஆதரவு கிடைக்கும். ஷேர் மார்க்கெட், டிரேடிங், ஆன்லைன் பிசினஸ் போன்றவற்றில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் செய்யுங்கள். நல்ல ரிட்டன்ஸ் கிடைக்க வாய்ப்புள்ளது. உங்கள் அரசியல் வாழ்க்கை ஏற்றம் மிகுந்ததாக இருக்கும். வேலையை பொறுத்தவரை ஏதாவது ஒரு ஜாப் இருக்கும். அதனால் உங்களின் கௌரவம், அந்தஸ்து, புகழ் கூடும். தேவை இருந்தால் மட்டும் கடன் வாங்குங்கள். எந்த போட்டித்தேர்வுகளாக இருந்தாலும் வெற்றி பெறுவீர்கள். புதிய காதல் மலர வாய்ப்புள்ளது. இந்த வாரம் முழுவதும் மகாலட்சுமி மற்றும் சிவனை வழிபாடு செய்யுங்கள்.  

Tags:    

மேலும் செய்திகள்