புதிய முயற்சிகள் வேண்டாம்

Update:2024-07-16 00:00 IST

2024 ஜூலை 16-ஆம் தேதி முதல் ஜூலை 22-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

சொந்த தொழில் பரவாயில்லை. புதிதாக தொழில் தொடங்க நினைப்பவர்கள் இந்த வாரம் வேண்டாம். பொருளாதார நிலைகளை பொறுத்தவரை கையில் பணம், தனம் இருக்கும். ஆனாலும் வருமானத்திற்கு ஏற்ற செலவினங்களும் உண்டு. நீங்கள் எடுக்கும் முயற்சிகள் ஏதும் வெற்றி பெறாது என்பதால் புதிய முயற்சிகள் வேண்டாம். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு லாபம் ஒன்றும் இல்லை. உயர்கல்விக்காக வெளிநாடு, வெளிமாநிலம், அப்ராடு செல்ல நினைப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள், சந்தர்ப்பங்கள் நிறைய இருக்கிறது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு இந்த வாரமும் தடைகள் இருக்கிறது. ஷேர் மார்க்கெட், டிரேடிங் ஆகியவை சுமாராக இருக்கிறது. யூக வணிகங்கள் ஏதுவாக இருந்தாலும் அதாவது மியூச்சுவல் பண்ட், லாட்டரி, ரேஸ் போன்றவற்றில் முதலீடு செய்வதாக இருந்தால் பொறுமையாகவும், நிதானமாகவும் செயல்படுங்கள். திருமண வாழ்க்கையை பொறுத்தவரை நார்மலாக இருக்கும். எது எப்படியிருந்தாலும் உங்களின் கௌரவம், அந்தஸ்து, புகழ் கூடும். அரசாங்க உதவியுடன் ஸ்டார்ட் அப் கம்பெனி, இன்டஸ்ட்ரியல் தொடங்க நினைப்பவர்கள் கொஞ்சம் காத்திருங்கள். பொறுமையாகவும், நிதானமாகவும் இருக்க வேண்டிய காலகட்டங்கள் இந்த வாரத்தில் இருக்கின்றன. இந்த வாரம் முழுவதுமே பெருமாள் கோயிலில் இருக்கக்கூடிய கருடாழ்வார் மற்றும் தன்வந்திரி பகவானை வழிபாடு செய்யுங்கள். 

Tags:    

மேலும் செய்திகள்