12 ஆண்டுகளுக்கு பிறகு வரும் குரு மங்கள யோகம்! 5 ராசிகள் டாப்பு!

குரு மங்கள யோகத்தால், 5 ராசியினர் அதிர்ஷ்டத்தின் ஆதரவையும், செயலில் தைரியத்தையும், சரியான முடிவுகளை எடுக்கக்கூடிய திடமான மனநிலையையும் பலமாக பெறவுள்ளனர்.

Update:2024-07-11 13:14 IST

ரிஷப ராசியில் சஞ்சரிக்கக்கூடிய குரு பகவானுடன், 12 ஆண்டுகளுக்கு பிறகு செவ்வாய் பகவான் சேர உள்ளார். ஜூலை 12ம் தேதி முதல் ஆகஸ்ட் 26ம் தேதி வரை, செவ்வாய், ரிஷபத்தில் சஞ்சரிக்கும் காலத்தில், இந்த குரு மங்கள யோகம் ஏற்படுகிறது. இதன் காரணமாக செவ்வாயை யோகர்களாக கொண்ட எல்லோருக்குமே மிகப்பெரிய நல்ல பலன்கள் கிடைக்கும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர். குறிப்பாக 5 ராசிக்காரர்களுக்கு மிகவும் சூப்பராக இருக்கும் என்றும் கணிப்பு தெரிவிக்கின்றனர். அந்த 5 ராசியனர் யார்? யார்? என்று பார்ப்போம்.


மேஷம் - பிறரிடம் சிக்கியுள்ள பணம் கைக்கு வரும்

மேஷம்

மேஷ ராசியினருக்கு, தன ஸ்தானத்தில் குரு மற்றும் செவ்வாயின் சேர்க்கையான குரு மங்கள யோகம் உண்டாகிறது. இதனால் வாழ்க்கையில் பல விதத்தில் சுப பலன்களை மேஷ ராசிக்காரர்கள் பெறப்போகிறார்கள். தங்களின் இலக்குகளை எளிதாக அடையப்போகிறார்கள். ரொம்ப காலமாக பிறரிடம் சிக்கியுள்ள பணம் கைக்கு கிடைக்கும். குடும்ப உறவுகளிடையே இணக்கமான சூழல் உருவாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் வருமானம் உயரும். பணியிடத்தில் திறமையை நிரூபிக்க முடியும். தொழிலதிபர்கள் நல்ல ஒப்பந்தங்களைப் பெறலாம். வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். ஆரோக்கியம் அருமையாக இருக்கும்.


கன்னி - சுக போகங்கள் கூடும்; வீடு, மனை அமையும்

கன்னி

குரு மங்கள யோகத்தால் கன்னி ராசியினரின் வருமானம் உயரும். சுக போகங்கள் கூடும். கன்னி ராசியினர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் அதிர்ஷ்டத்தின் ஆதரவை உணர்வீர்கள். நினைத்த காரியங்களை எளிதாக முடிப்பீர்கள். வெளிநாடு செல்ல திட்டமிடுபவர்களுக்குச் சாதக சூழல் உருவாகும். சரியான ஆலோசனையுடன் செய்யக்கூடிய முதலீடுகள் மூலம் அதிக லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றமும், புதிய நபர்களை சந்திக்கும் வாய்ப்பும் ஏற்படும். வீடு, மனை போன்றவைகள் அமையும். வணிகத்தில் தொடர்புடையவர்கள் சிறப்பான லாபத்தை எதிர்பார்க்கலாம்.  


விருச்சிகம் - வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்பு அமோகம்

விருச்சிகம்

விருச்சிகத்திற்கு குரு மங்கள யோகம் மிகச் சிறந்த பலன்களை கொடுக்கவுள்ளது. விருச்சிகத்தின் ராசி நாதனான செவ்வாய் பகவான், குருவுடன் சப்தம ஸ்தானத்தில் சேர்ந்து சஞ்சரிப்பதால் அமோகமான பலன்களை தரப்போகிறார். விருச்சிக ராசியினருக்கு குடும்ப ஒற்றுமையும், பரஸ்பர ஒருங்கிணைப்பும் சிறப்பாக இருக்கும். பொருளாதார ரீதியான முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம். குடும்பத்துச் சுற்றுலா, விசேஷம் தொடர்பாக வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியிடத்தில் தங்களுக்கான அடையாளத்தை உருவாக்கிக் கொள்ள முடியும். பதவி, சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம். கணவன், மனைவி இடையே அன்பும், அரவணைப்பும் அதிகரிக்கும். உடல் ரீதியாக, மன ரீதியாக வலுவாக இருப்பீர்கள்.


தனுசு - வீட்டில் சுப நிகழ்வுகள் நடைபெறும்

தனுசு

தனுசுக்கு அதிபதியான குரு மற்றும் செவ்வாய் பகவானின் சேர்க்கையான குரு மங்கள யோகம், அந்த ராசியினருக்கு ஆறுதலையும், மகிழ்ச்சியையும் தரும். தனுசு ராசிக்காரர்களின் முயற்சிகள் முழுமையாக வெற்றியடையும். அரசாங்க திட்டத்தின் மூலம் நன்மைகள் கிடைக்கும். இல்லற வாழ்க்கையில் சுகபோகங்கள் அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை உயரும். தொண்டு வேலைகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். வீட்டில் சுப நிகழ்வுகள் நடக்கும்.


மீனம் - குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் குடிகொள்ளும்

மீனம்

குரு மங்கள யோகத்தால் மீன ராசியினரின் செயல்கள் சிறப்பாக இருக்கும். திட்டமிட்ட பணிகள் நிறைவேறும். நல்ல லாபம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் திறமையை நிரூபிக்க முடியும். வேலையை மாற்ற நினைப்பவர்களுக்கு புதிய, நல்ல வாய்ப்புகள் அமையும். பெற்றோருடனான உறவு மேம்படும். குடும்ப பொறுப்புகளை நிறைவேற்ற முடியும். வியாபாரத்தை விரிவுபடுத்தச் சாதகமான சூழல் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் குடிகொள்ளும்.

மேலே குறிப்பிட்டுள்ள 5 ராசிக்காரர்களை தவிர கடகம், சிம்மம், மகரம் ஆகியோருக்கும், இந்த குரு மங்கள யோகம் சிறப்பான பலன்களை தரும் என ஜோதிடர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக மகர ராசிக்காரர்களுக்கு திருமணம் சார்ந்த தடைகள் இருந்தால் நீங்கி, திருமண ஏற்பாடுகள் நடைபெறும் அமைப்பு உண்டாகுமாம்.

Tags:    

மேலும் செய்திகள்