உடல் ஆரோக்கியத்தில் கவனம்

Update: 2024-08-26 18:30 GMT

2024 ஆகஸ்ட் 27-ஆம் தேதி முதல் செப்டம்பர் 02-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

பொருளாதார நிலைகள் நன்றாக உள்ளன. கஷ்டப்பட்டு சம்பாதிக்கக்கூடிய பணம் உங்கள் கையில் இருந்தாலும், எதிர்பாராமல் செலவு செய்ய வேண்டிய காலமும் இருக்கிறது. நீங்கள் எடுக்கும் முயற்சிகள் ஓரளவு உங்களுக்கு சாதகமாக இருக்கும். பேச்சின் மூலமாக வருமானங்கள் இருக்கிறது. அதேநேரம் உங்கள் முயற்சிகளையும் கைவிட்டுவிடாதீர்கள். எந்த அளவுக்கு உங்களை நீங்களே புதுப்பித்து கொள்கிறீர்களோ அந்த அளவுக்கு பின்னாளில் வாழ்க்கையில் பெரிய ஆளாக வருவதற்கு வாய்ப்புகள் உண்டு. உங்கள் வாழ்க்கையில் யாரையும் நம்பாமல் இருக்க வாய்ப்பே இல்லை. எதற்கெடுத்தாலும் சந்தேகம் வேண்டாம். இன்னொரு நாள் பார்த்துக்கொள்ளலாம் என்ற எண்ணம் வேண்டாம். எவ்வளவு சுறுசுறுப்பாக செயல்பட முடியுமோ, அவ்வளவு வேகமாக செயல்படுங்கள். இந்த வாரத்தில் பயணங்கள் இருக்கிறது. அந்த பயணங்கள் தேவையற்ற செலவினங்களை கொடுக்கும். அம்மாவுடைய உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். எதிர்பாராத ஊர் மற்றும் இடமாற்றங்கள் உண்டு. ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் சுமாரான அளவிலேயே செய்யுங்கள். நல்லதொரு ரிட்டன்ஸ் கிடைக்கும். டிரேடிங், மியூச்சுவல் பண்ட் போன்றவற்றிலும் முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு ஓரளவு வாய்ப்புகள் இருக்கின்றன. அரசியல் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு நல்லதொரு ஏற்றம், முன்னேற்றம் இருக்கிறது. வேலையை பொறுத்தவரை இடமாற்றங்கள், தடைகள் போன்றவை உள்ளன. இந்த வாரம் முழுவதும் பைரவரையும், குறிப்பாக ஆஞ்சநேயரையும் வழிபாடு செய்யுங்கள்.

Tags:    

மேலும் செய்திகள்