புகழ் கூடும்

Update:2024-07-23 00:00 IST

2024 ஜூலை 23ஆம் தேதி முதல் ஜூலை 29-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதிக்கக்கூடிய சம்பாத்தியங்கள், கையில் பணம், தனம் மற்றும் பொருளாக இருக்கும். ஆனாலும், தேவையில்லாத செலவினங்கள் இருக்கின்றன. யாருக்கும் தேவையில்லாமல் கடன் கொடுக்காதீர்கள். அந்த பணங்கள் திரும்பி வருவதற்கான வாய்ப்புகள் குறைவு. நீண்ட நாட்களாக இடம், வீடு, வீட்டு உபயோகப்பொருட்கள், வண்டி, வாகனம் வாங்க நினைத்தவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் உண்டு. கல்வி நன்றாக உள்ளது. அம்மாவின் அன்பு ஆதரவு கிடைக்கும். விவசாயம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு நல்லதொரு மகசூல், லாபம் இருக்கிறது. உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு நல்லதொரு ஏற்றம், முன்னேற்றம் கிடைக்கும். ஷேர் மார்க்கெட், ரேஸ், லாட்டரி, டிரேடிங், ஆன்லைன் பிசினஸ், மியூச்சுவல் ஃபண்ட் போன்ற எந்த துறையாக இருந்தாலும் முதலீடு செய்ய நினைப்பவர்கள் சுமாரான அளவில் செய்யலாம். நல்ல ரிட்டன்ஸ் கிடைக்கும். டூர் அல்லது டிராவல் போவதற்கான வாய்ப்புகள் உள்ளன. வேலையை பொறுத்தவரை பரவாயில்லை. உங்களின் வேலையில் முன்னேற்றங்கள், பணி உயர்வு, சம்பள உயர்வு போன்ற அத்தனை விஷயங்களும் உள்ளன. கடன் அல்லது லோனை எதிர்பார்த்து இருந்தால் கிடைக்கும். சொந்த தொழில் மற்றும் கூட்டுத் தொழில் இரண்டுமே நன்றாக உள்ளது. இந்த வாரம் உங்களின் விருப்பம், ஆசை, எண்ணம், புகழ் அனைத்தும் கூடும். நண்பர்களால் மகிழ்ச்சி, சந்தோஷம் இருக்கிறது. இந்த வாரம் முழுவதும் சிவன் கோயிலில் இருக்கக்கூடிய நந்தியம் பெருமான் மற்றும் பைரவரை வழிபாடு செய்யுங்கள்.

Tags:    

மேலும் செய்திகள்