பொறுமை, நிதானம்

Update:2025-01-07 00:00 IST

2025 ஜனவரி 07-ஆம் தேதி முதல் 2025 ஜனவரி 13-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

கொஞ்சம் பொறுமையாகவும், நிதானமாகவும் இருந்து செயல்பட வேண்டும். எல்லாமே சாதகமாக இருப்பது போன்ற தோற்றம். ஆனால், இல்லை. வேலை, வாய்ப்புகள் நன்றாக உள்ளது. நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கான அங்கீகாரம் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. குழந்தைக்காக காத்திருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டு. அவர்களால் மகிழ்ச்சி, சந்தோஷம் உண்டு. நிலுவையில் உள்ள பணங்கள் தவணை முறையில் வர வாய்ப்புள்ளது. பென்ஷன், பிஎஃப், கிராஜுவிட்டி, இன்சூரன்ஸ் ஆகிய பணங்கள் வராமல் இருந்தால் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. தொழில் நன்றாக இருப்பதால் சொந்த தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். உங்கள் பிசினஸை விரிவாக்கம் செய்ய வாய்ப்புள்ளது. இரண்டாம் திருமணத்திற்கு முயற்சி செய்தால் நடப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. அப்பாவுடைய அன்பு, ஆதரவு கிடைக்கும். உடல் உழைப்பு இல்லாமல் சம்பாத்தியம் செய்வதற்கான வாய்ப்பும் உள்ளது. இந்த வாரம் முழுவதும் குலதெய்வம் மற்றும் சிவன் கோயிலில் இருக்கக்கூடிய அம்பாளை தரிசனம் செய்யுங்கள்.  

Tags:    

மேலும் செய்திகள்