எதிர்பாராத தனவரவு
2025 ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் 2025 ஏப்ரல் 21-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
இந்த வாரமும் தெய்வ அனுகூலம் தொடர்கிறது. நீண்ட தூர பயணம் செல்ல திட்டமிடுவீர்கள். வேலை, வாய்ப்புகள் பரவாயில்லை. உங்கள் முயற்சிகளுக்கான அங்கீகாரம் நிச்சயம் உண்டு. வேலை மாற்றம், இடமாற்றம் உண்டு. திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு திருமணம் நடப்பதற்கான வாய்ப்பு நிறைய உள்ளது. குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தைக்கான வாய்ப்பு, சந்தர்ப்பங்கள் நிறைய உண்டு. சமூகத்தில் உங்களுக்கான மதிப்பு மரியாதை கூடும். புதிய முயற்சிகள் வெற்றிகளை கொடுக்க வாய்ப்புள்ளது. நீங்கள் எதிர்பார்க்கும் செய்திகள் உங்களுக்கு சாதகமாக வரும். அப்பாவின் அன்பு, ஆதரவு கிடைக்கும். ஒன்றிற்கும் மேற்பட்ட தொடர்புகள் ஏற்படும். ஆண் நண்பர்களால் மகிழ்ச்சி, சந்தோஷம் இருந்து கொண்டே இருக்கிறது. எதிர்பாராத தனவரவு, பொருள் வரவு இருக்கிறது. இந்த வாரம் முழுவதும் முருகர் மற்றும் நரசிம்மரை தரிசனம் செய்யுங்கள்.