யாரையும் நம்பாதீர்கள்
2025 ஜனவரி 14-ஆம் தேதி முதல் 2025 ஜனவரி 20-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
வருமானங்கள் பரவாயில்லை. நிலுவையில் உள்ள பணங்கள் தவணை முறையில் வந்து சேரும். முன்னோர்களுடைய சொத்துக்கள் வர வாய்ப்புள்ளது. எதிர்பாராத பொருள் மற்றும் தனவரவு இருக்கிறது. பென்ஷன், பிஎஃப், கிராஜுவிட்டி, அரியர்ஸ், இன்சூரன்ஸ் ஆகிய வராத பணங்கள் இந்த வாரத்தில் வரும். வேலை, வாய்ப்புகளை பொறுத்தவரை உங்கள் முயற்சிகள் வெற்றிபெற வாய்ப்புகள் இல்லை. புதிய முயற்சிகள் எதுவும் வேண்டாம். தேவையில்லாத பிரச்னைகளில் இறங்கி சிக்கலை ஏற்படுத்தி கொள்ளாதீர்கள். தெளிவான முடிவுகளை எடுங்கள். யாரையும் பெரிதாக நம்பாதீர்கள். ஏனென்றால் யாரும் உங்களுக்கு உண்மையாக இருக்க வாய்ப்பில்லை. குறிப்பாக இளைய சகோதர - சகோதரிகளால் மனவருத்தங்கள் இருந்துகொண்டே இருக்கிறது. மணவாழ்க்கையில் கணவன் - மனைவி உறவு நன்றாக இருக்கிறது. உயர் கல்வியில் தடைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. பெண் நண்பர்களால் தேவையற்ற பிரச்சினைகள், போராட்டங்கள், மனவருத்தங்கள் ஏற்பட்டு விலகும். இந்த வாரம் முழுவதும் பெருமாள் கோயிலில் இருக்கக்கூடிய தாயார் மற்றும் சிவன் கோயிலில் இருக்கக்கூடிய பைரவர் ஆகியோரை வழிபாடு செய்யுங்கள்.