புதிய முயற்சிகள் வேண்டாம்

Update:2024-11-05 00:00 IST

2024 நவம்பர் 05-ஆம் தேதி முதல் நவம்பர் 11-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

நீங்கள் நினைப்பது அனைத்தும் நடக்கும். வேலையில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். கிரகங்கள் சாதகமாக இல்லாததால் புதிய முயற்சிகள் எதுவும் செய்ய வேண்டாம். முடிந்தால் பயணம் செய்யுங்கள்; இல்லையென்றால் தவிர்த்து விடுங்கள். இளைய சகோதர - சகோதரிகள், நெருங்கிய உறவுகளால் மன நிம்மதியற்ற சூழ்நிலைகள் அத்தனையும் இருக்கிறது. தேவையில்லாத சிந்தனைகள் வேண்டாம். தவிர்த்து விடுங்கள். யாரை நினைத்தும் கவலைபடாதீர்கள். உங்களை பற்றிய வீண் வதந்திகள் இருக்கும். அதை கண்டும் காணாமலும் சென்று விடுங்கள். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புகழ், அந்தஸ்து, பாப்புலாரிட்டி இருக்கிறது. ஆனால், வருமானங்கள் இல்லை. அரசியலில் இருப்பவர்களுக்கு எதிரிகளால் மறைமுகமான தொல்லைகள் இருப்பதால் மிக மிக கவனம் தேவை. நண்பர்களால் மகிழ்ச்சி, சந்தோஷம்; மூத்த சகோதர - சகோதரிகளால் நன்மைகள் ஆகியவை இருக்கிறது. வேலை வாய்ப்புகள் சுமாராக இருக்கிறது. வேலையில் எதிர்பார்த்த முன்னேற்றங்கள் இருக்கிறது. லோனுக்கு விண்ணப்பித்திருந்தால் கிடைக்கும். போட்டித் தேர்வுகள் எழுதியிருந்தால் வெற்றி பெறுவீர்கள். இந்த வாரம் சிவன் கோயிலில் இருக்கும் பைரவருடைய வழிபாட்டை அதிகப்படுத்துங்கள். 

Tags:    

மேலும் செய்திகள்