புதிய காதல் மலரும்

Update: 2024-11-25 18:30 GMT

2024 நவம்பர் 26-ஆம் தேதி முதல் டிசம்பர் 02-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

பொருளாதார நிலைகளை பொறுத்தவரை கையில் பணம், தனம் இருக்கிறது. அதற்கு ஏற்ற செலவினங்களும் இருக்கின்றன. எதிர்பாராத எண்டெர்டெயின்மென்ட், டூர், டிராவல் இருக்கிறது. அதற்காகவும், அப்பாவின் உடல் ஆரோக்கியத்திற்காகவும் செலவு செய்ய வேண்டிய காலமாக உள்ளது. நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றிபெற வாய்ப்புகள் இல்லை. அதனால், புதிய முயற்சிகள் செய்யும்போது கொஞ்சம் கவனமாக இருங்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள், சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். தெய்வ தரிசனம் அமைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. குழந்தைகளால் மகிழ்ச்சி, சந்தோஷம் இருக்கிறது. விருந்தினர்கள் வீட்டிற்கு வருவார்கள். வேலை வாய்ப்புகள் பரவாயில்லை. வேலையில் நீங்கள் எடுக்கும் கடின முயற்சிகளுக்கான அங்கீகாரம் கிடைக்கும். லோனுக்கு விண்ணப்பித்திருந்தால் கிடைக்கும். கூட்டுத்தொழிலில் பார்ட்னர் லாபம் அடைவார். நீங்கள் நஷ்டம் அடைவீர்கள். கணவன் மனைவிக்கிடையே சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு விலகும். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புரொடக்சனுக்கு தகுந்த விற்பனை இருக்கிறது. ஆனால், லாபம் குறைவு. புதிய காதல் மலரும். ஏற்கனவே காதலித்தால் அந்த காதல் வெற்றியடையும். பிரிந்த காதல் மீண்டும் சேரும். யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். அந்த பணம் திரும்பி வராது. இந்த வாரம் முழுவதம் சிவன் கோயிலில் இருக்கக்கூடிய நந்திகேஸ்வரரை வழிபாடு செய்யுங்கள். 

Tags:    

மேலும் செய்திகள்