வேலையில் அந்தஸ்து கூடும்
2024 ஆகஸ்ட் 06-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 12-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
பொருளாதார நிலைகள் நன்றாக உள்ளது. நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதிக்கக்கூடிய சம்பாத்தியங்கள் உங்கள் கையில் பணமாகவோ, தனமாகவோ, பொருளாகவோ இருப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. இந்த வாரத்தில் அவசரம், அவசியம் இருந்தால் மட்டும் கடன் வாங்குங்கள். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் ஏதோவொரு வகையில், உங்களுக்கு சாதகமாக இருக்கும். நீங்கள் தொடர்பு கொள்ள நினைப்பவர்களை நேரடியாக தொடர்பு கொள்ளுங்கள். இளைய சகோதர - சகோதரிகளுக்காக செலவு செய்வீர்கள். நீண்ட நாட்களாக விற்பனையாகாமல் இருந்த சொத்துக்கள் நல்ல விலைக்கு போகும் அல்லது அதுகுறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெறும். பகுதி நேரமாகவோ, ஆன்லைனிலோ படிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. சொந்தமாக இடம், மனை, வீடு, வண்டி, வாகனம், வீட்டு உபயோகப் பொருட்கள் ஆகியவை வாங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளது. அம்மாவின் அன்பு, ஆதரவை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு அது கிடைக்கும். வேலையை பொறுத்தவரை பிரச்சினைகள் ஏதும் இல்லை. ஏதோவொரு விதத்தில் நீங்கள் பார்க்கும் வேலையில் உங்களின் அந்தஸ்து கூடும். சொந்த தொழில் பரவாயில்லை. கூட்டுத்தொழிலில் பார்ட்னர் லாபம் அடைவார் அல்லது இருவரும் திருப்தியற்ற மனநிலையில் இருப்பீர்கள். மணவாழ்க்கையில் கணவன் - மனைவியிடையே சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள் ஏற்படும். இந்த வாரம் முழுவதும் பைரவரையும், ஆஞ்சநேயரையும் வழிபாடு செய்யுங்கள்.