குழந்தை பாக்கியம்

Update:2024-08-13 00:00 IST

2024 ஆகஸ்ட் 13-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 19-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

பொருளாதார நிலைகள் பரவாயில்லை. நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதிக்கக்கூடிய சம்பாத்தியங்கள் உங்கள் கையில் பணமாகவோ, தனமாகவோ இருக்கும். உங்களின் விருப்பங்கள், எண்ணங்கள், ஆசைகள், அபிலாஷைகள் பூர்த்தியாகும். உங்களின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் மூத்த சகோதர - சகோதரிகளால் மகிழ்ச்சி, சந்தோஷம் இருக்கிறது. எதிர்பாராத பயணம், அந்த பயணத்தால் வருமானங்கள் இவை அனைத்தும் இருக்கிறது. இளைய சகோதர - சகோதரிகளுக்காக செலவு செய்வீர்கள். நெருங்கிய உறவுகள் உங்களை விட்டு பிரிந்து போவார்கள். சொத்துக்கள் விற்பனையாகாமல் இருந்தால் நல்ல விலைக்கு போகும். கல்வி நன்றாக உள்ளது. அம்மாவின் அன்பு, ஆதரவு கிடைக்கும். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புரொடக்சனுக்கு தகுந்த நல்ல விற்பனை இருக்கிறது. நீண்ட நாட்களாக குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி, சந்தோஷம் என்பது இருந்து கொண்டே இருக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள், சுபகாரியங்கள் நடப்பதற்கான வாய்ப்பு உள்ளது. வேலையை பொறுத்தவரை எதிர்பார்த்த முன்னேற்றங்கள் இருக்கிறது. வேலை நிமித்தமான இடமாற்றம் உண்டு. சம்பள உயர்வை எதிர்பார்ப்பவர்களுக்கு கிடைக்கும். வேலையில், உங்கள் முயற்சிகளுக்கான அங்கீகாரம் கிடைக்கும். சொந்த தொழில் பரவாயில்லை. கூட்டுத்தொழிலில் உங்கள் பார்ட்னர் லாபம் அடைவார். இந்த வாரம் முழுவதும் கருடாழ்வார் மற்றும் பைரவரை வழிபாடு செய்யுங்கள்.   

Tags:    

மேலும் செய்திகள்