தொழிலில் லாபம்

Update:2024-07-16 00:00 IST

2024 ஜூலை 16-ஆம் தேதி முதல் ஜூலை 22-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

நீங்கள் எடுக்கும் முயற்சிகள், எதிர்பார்த்த செய்திகள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக இருக்க வாய்ப்புள்ளது. நேர்முகத்தேர்வுகளில் கலந்துகொண்டால் வெற்றி பெறுவீர்கள். நீங்கள் யாரை நம்பி இருக்கிறீர்களோ அவர்களால் நற்பலன்கள் உண்டு. பிரச்சினைகள், போராட்டங்கள் ஏற்படும் போதெல்லாம் அதை சரி செய்துவைக்க யாராவது வருவார்கள். பொருளாதார நிலைகளை பொறுத்தவரை வருமானங்கள், சம்பாத்தியங்கள் பரவாயில்லை. உங்கள் கையில் பணம், தனம், பொருள் இருப்பதற்கான சூழ்நிலைகள் நிறைய உண்டு. வேலையை பொறுத்தவரை நீங்கள் எதிர்பார்த்த முன்னேற்றங்கள் இருக்கிறது. லோனுக்கு விண்ணப்பித்திருந்தால் கிடைக்கும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு நல்லதொரு முன்னேற்றம், வருமானங்கள் இருக்கிறது. சொந்த தொழில் பரவாயில்லை. கூட்டுத்தொழிலில் நீங்கள், பார்ட்னர் இருவருமே லாபம் அடைவீர்கள். சிறுதொழில், சுய தொழில், வீட்டில் வைத்து தொழில், ஆன்லைன் பிசினஸ் ஆகியவை உங்களுக்கு சாதகமாகவும், நன்றாகவும் இருக்கும். வெளிவட்டாரத்தில் இருந்து வர வேண்டிய பணங்கள் வந்து சேரும். உயர்கல்வியில் தடை ஏற்பட வாய்ப்புள்ளது. கிரக நிலைகள் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் வேறு அலுவலகம் மாற நினைப்பவர்கள் மாறலாம். யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புரொடக்சனுக்கு தகுந்த விற்பனை, அதற்கு லாபம், வருமானம் ஆகியவை இருக்கிறது. இந்த வாரம் முழுவதும் ஆஞ்சநேயர் மற்றும் பெருமாளை வழிபாடு செய்யுங்கள். 

Tags:    

மேலும் செய்திகள்