முயற்சிகள் வேண்டாம்

Update: 2024-07-01 18:30 GMT

2024 ஜூலை 02-ஆம் தேதி முதல் ஜூலை 08-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

உங்களின் எண்ணங்கள், ஆசைகள், அபிலாஷைகள் பூர்த்தியாகும். அதற்காக பெரிய அளவில் செலவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. உங்களுக்கு வருமானங்கள், சம்பாத்தியங்கள் நிறைய இருக்கிறது. அதற்கு தகுந்த செலவினங்களும் இருக்கின்றன. அந்த செலவினங்கள் பிற்காலத்தில் மகிழ்ச்சியை, சந்தோஷத்தை மட்டுமின்றி லாபத்தை கொடுக்கும். யாரெல்லாம் பேச்சின் மூலமாக வருமானத்தை சம்பாதிக்கிறீர்களோ அவர்களுக்கு நன்றாக உள்ளது. எல்லாம் சுமார் என்ற அளவில் இருப்பதால் பெரிய அளவில் முயற்சிகள் ஏதும் செய்ய வேண்டாம். நீங்கள் எதிர்பார்த்த செய்திகள் சாதகமாக வருவதில் நிறைய தடைகள் இருக்கின்றன. யாரையும் நம்பாதீர்கள். யாரையும் நம்பி எந்த காரியத்திலும் இறங்காதீர்கள். கவனமாக இருங்கள். மனதை சாந்தமாக வைத்துக்கொள்ளுங்கள். எதுவந்தாலும் பொறுமை நிதானம் மிகவும் முக்கியம். இந்த வாரத்தில் யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். அந்த பணம் திரும்பி வருவதற்கான வாய்ப்புகள் இல்லை. வேலையை பொறுத்தவரை நீங்கள் பார்க்கும் வேலையை விட்டு வெளியே வரவேண்டும் அல்லது வெளியேற்றப்பட வேண்டிய சூழல்கள் உருவாகும். சொந்த தொழில் சுமாராக உள்ளது. கூட்டுத்தொழிலில் இருவரும் லாபம் அடைவீர்கள். மணவாழ்க்கையை பொறுத்தவரை பரவாயில்லை. உயர்கல்வியில் பிரேக் ஏற்படும். இந்த வாரம் முழுவதும் கிருஷ்ணரையும், தன்வந்திரி பகவானையும் வழிபாடு செய்யுங்கள்.  

Tags:    

மேலும் செய்திகள்