முதலீடு வேண்டாம்
2024 செப்டம்பர் 17-ஆம் தேதி முதல் செப்டம்பர் 23-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணங்கள் உங்கள் கையில் இருந்தாலும் அதற்கு ஏற்ற செலவினங்களும் இருக்கிறது. அதனால் சொத்து, இடம் போன்ற ஏதாவது ஒன்றில் முதலீடு செய்யுங்கள். அதேநேரம் ஷேர் மார்க்கெட், லாட்டரி போன்றவற்றில் முதலீடு செய்தால் சுமாராகத்தான் இருக்கும். இவற்றை தாண்டி நமது உணர்வுகளை தூண்டக்கூடிய வாரமாக இருப்பதால் பிட்காயின்ஸ், கிரிப்டோ கரன்சி, டிரேடிங், மியூச்சுவல் ஃபண்ட் போன்றவற்றில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் செய்யாமல் இருப்பது நல்லது. ஏனென்றால் தேவையில்லாத நஷ்டத்தை ஏற்படுத்தும். உங்களுடைய உழைப்பு மற்றவர்களுக்கு லாபம். உங்களுக்கு பிரயோஜனம் இல்லை. பணம், பொருள் முடங்கிக்கொள்ளும் அல்லது மாட்டிக்கொள்ளும் காலமாக இருப்பதால் எதிலும் முதலீடு வேண்டாம். குழந்தைகளால் மகிழ்ச்சி, சந்தோஷம் இருக்கிறது. யாருக்கும் தேவையில்லாமல் கடன் கொடுக்காதீர்கள். அவை திரும்பி வருவதற்கான வாய்ப்புகள் இல்லை. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். எதிர்பாராத நட்பு, அந்த நட்பால் ஒருபக்கம் நன்மை, இன்னொரு பக்கம் பிரச்சினை இருக்கிறது. கணவன் - மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள், சண்டை சச்சரவுகள் இருக்கிறது. தொழிலில் முதலீடு செய்வது, பாட்னருடன் புரிதல் இல்லாமல் போவது போன்ற நிகழ்வுகள் எல்லாம் இருப்பதால் எல்லாவற்றிலும் பொறுமையாகவும், நிதானமாகவும் செயல்படுங்கள். வேலையில் சின்ன சின்ன பிரச்சினைகள் இருக்கின்றன. வாரம் முழுவதும் சனி பகவானையும், பெருமாள் கோயிலில் இருக்கும் சக்கரத்தாழ்வாரையும் வழிபாடு செய்யுங்கள்.