"பறவைகளின் தற்கொலை பள்ளத்தாக்கு" - அசாமிலிருக்கும் வினோத கிராமம்!

இந்தியாவில் பல விசித்திரமான இடங்கள் உள்ளன, அதைப் பற்றி நீங்கள் அடிக்கடி செய்திகளில் பார்த்திருக்கலாம். சில இடங்களில் பேய்கள் உலவுவதாகவும், சில இடங்களில் மர்மமான ஒலிகள் கேட்கும் என்றும் பல வதந்திகளை கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இன்று நாம் தெரிந்துகொள்ளப்போவது மனிதர்களுக்கு பிரச்சினை தரும் இடம் பற்றி அல்ல,

Update:2024-07-02 00:00 IST
Click the Play button to listen to article

இந்தியாவில் பல விசித்திரமான இடங்கள் உள்ளன, அதைப் பற்றி நீங்கள் அடிக்கடி செய்திகளில் பார்த்திருக்கலாம். சில இடங்களில் பேய்கள் உலவுவதாகவும், சில இடங்களில் மர்மமான ஒலிகள் கேட்கும் என்றும் பல வதந்திகளை கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இன்று நாம் தெரிந்துகொள்ளப்போவது மனிதர்களுக்கு பிரச்சினை தரும் இடம் பற்றி அல்ல, மாறாக பறவைகளுக்குப் பிரச்சினையாக உள்ள இடத்தைப் பற்றிதான். ஆம், ஆண்டுதோறும் பறவைகள் தற்கொலை செய்துகொள்ளும் இடம் பற்றிதான் நாம் பார்க்கப்போகிறோம். அசாமில் உள்ள ஜதிங்கா என்கிற கிராமத்தில்தான் இந்த மர்மமான விஷயங்கள் நடந்து வருகின்றன. இதுகுறித்து விரிவாக இப்பதிவில் காணலாம்.


‘பறவைகளின் தற்கொலை பள்ளத்தாக்கு’ என்று அழைக்கப்படும் ஜதிங்கா கிராமம் 

"ஜதிங்கா" என்னும் மர்மமான கிராமம் :

அசாம் மாநிலத்தில் உள்ள ஜதிங்கா கிராமத்திற்குதான் ஆண்டுதோறும் செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதங்களில் பறவைகள் கூட்டம் கூட்டமாக வந்து தற்கொலை செய்து கொள்கின்றன. இங்கு வரும் பறவைகள் போரைல் மலைகளுக்கு மத்தியில் அமைந்துள்ள ஜதிங்கா கிராமத்தில் தற்கொலை செய்துகொள்வதற்காக வருவதால் இந்த இடமானது ‘பறவைகளின் தற்கொலை பள்ளத்தாக்கு’ என்றே அழைக்கப்படுகிறது. இந்த பறவைகளின் தற்கொலை நிகழ்வானது கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வருகிறது. ஏன் அந்த குறிப்பிட்ட காலத்தில் இங்கே பறவைகள் வருகின்றன? ஏன் வினோதமாக நடந்துகொள்கின்றன? ஏன் தற்கொலை செய்துக்கொள்கின்றன என்பதைக் கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் மற்றும் பறவையியல் வல்லுநர்கள் என பலரும் ஆராய்ச்சி செய்துவிட்டனர். ஆனால் சரியான காரணம் இதுவரை தெரியவில்லை. யூகங்கள் மட்டுமே மிஞ்சுகிறது.


போரைல் மலைகளுக்கு மத்தியில் அமைந்துள்ள ஜதிங்கா கிராமம்

எவ்வாறு பறவைகள் ஜதிங்காவில் தற்கொலை செய்து கொள்கின்றன :

தற்கொலை தொடர்பான செய்திகள் மனிதர்களிடம் மட்டுமே காணப்படும். ஆனால் பறவைகளில் இது மிகவும் ஆச்சரியமான நிகழ்வாக இருக்கிறது. அங்குள்ள கிராமவாசிகளின் தகவலின்படி பறவைகள் மிக அதிக வேகத்தில் பறந்து வந்து அங்குள்ள கட்டிடங்கள் அல்லது மரங்களில் மோதுகின்றன. வேகமாக மோதுவதால் பறவைகளால் பறக்கக் கூட முடியாமல் மிகவும் காயமடைந்து இறக்கின்றன. செப்டம்பர் முதல் நவம்பர் வரையிலான மாதங்களில் இதுபோன்ற தற்கொலை சம்பவங்கள் அதிகமாக நடக்கின்றன. அதுவும் இரவு 7 மணி முதல் 10 மணி வரை பறவைகள் இங்கு வந்து உயிரை மாய்த்துக் கொள்கின்றன. மீதி நாட்கள் எல்லாம் பறவைகள் அனைத்தும் வானில் பறந்து கொண்டே இருக்கின்றன.


 பறவைகளால் சபிக்கப்பட்டதாக நம்பப்படும் ஜதிங்கா!

ஏன் ஜதிங்காவில் இது நடைபெறுகிறது?

ஆண்டுதோறும் 40 வகையான உள்ளூர் மற்றும் புலம்பெயர்ந்த பறவைகள் இங்கு தற்கொலை செய்து கொள்கின்றன. இயற்கை காரணங்களால் ஜதிங்காவானது பிற நகரங்களிலிருந்து தனித்து இருக்கின்றது. தற்போதைய நிலவரப்படி, இப்பகுதியில் நடக்கும் பறவைகளின் தற்கொலைகளுக்கு அறிவியல்பூர்வமான எந்த காரணிகளும் இதுவரை கூறப்படாத நிலையில், அண்மையில் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றில் சில கோட்பாடுகள் கூறப்பட்டுள்ளன. "ஜதிங்கா கிராமம் சபிக்கப்பட்டதாகவும், பறவைகள் தற்கொலை செய்து கொள்ளும் இந்த நிகழ்வு பெரும் பேரழிவை ஏற்படுத்தும் என்று சிலர் நம்புவதாகவும் வீடியோவில் கூறப்பட்டுள்ளது. இன்னொரு பக்கம் அப்பகுதியில் உள்ள அதிகப்படியான காந்தப்புலம் இந்த சம்பவங்களுக்கு காரணம் என்று மற்றவர்கள் நினைக்கிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படி பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், இந்த நிகழ்வின் பின்னணியில் உள்ள சரியான விளக்கத்தை யாராலும் நிரூபிக்க முடியவில்லை.


ஜதிங்காவில் ‘தீய ஆவிகள்’ இருப்பதாலேயே பறவைகள் இறப்பதாக நம்பும் கிராம மக்கள் 

தடைசெய்யட்ட ஜதிங்கா கிராமம் :

பல கிராம மக்கள் இந்த சம்பவத்தின் பின்னணியில் ‘தீய ஆவிகள்’ இருப்பதாக நம்பி வருகின்றனர். உள்ளூர்வாசிகள் இதுகுறித்து கூறிய போது “பறவைகள் மயக்கமடைந்து, திசைதிருப்பப்பட்டு, மரங்கள், விளக்குகள் மற்றும் கட்டிடங்களில் கூட மோதிக் கொள்வதாக” தெரிவிக்கின்றனர். ஜதிங்கா கிராமத்தில் இந்த நிகழ்வானது 1910-ல் தொடங்கியுள்ளது. இருப்பினும், 1957-ம் ஆண்டில்தான் இதுகுறித்து வெளி உலகிற்கு தெரியவந்துள்ளது. பிரிட்டிஷ் தேயிலை தோட்டக்காரரான இ.பி.கி என்பவர் தனது "வைல்ட் லைஃ ஆஃப் இந்தியா‘" புத்தகத்தில் இதைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்