பசிபிக் பெருங்கடலில் தனித்து காணப்படும் ஈஸ்டர் தீவு! ஏலியன்களால் உருவாக்கப்பட்ட கற்சிலைகள்?

பசிபிக் பெருங்கடலில் தனித்து காணப்படும் தீவு தான் இந்த ஈஸ்டர் தீவு. இந்த தீவு சிலியில் இருந்து 3,600 கிமீ மேற்கேயும், பிட்கேர்ன் தீவில் இருந்து 2,075 கிமீ கிழக்கே அமைந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் பல ஆயிரம் கிலோமீட்டர்களுக்கு எந்த நிலப்பரப்பையும், வேறு எதையும்கூட பார்த்திட முடியாது.

Update:2024-12-17 00:00 IST
Click the Play button to listen to article

பசிபிக் பெருங்கடலில் தனித்து காணப்படும் தீவுதான் ஈஸ்டர் தீவு. இந்த தீவு சிலியில் இருந்து 3,600 கிமீ மேற்கேயும், பிட்கேர்ன் தீவில் இருந்து 2,075 கிமீ கிழக்கேயும் அமைந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் இப்பகுதியிலிருந்து பல ஆயிரம் கிலோமீட்டர்களுக்கு எந்த நிலப்பரப்பையும், வேறு எதையும்கூட பார்த்திட முடியாது. நீலக் கடலின் நடுவே, பச்சை புள்ளியாய் இருக்கும் இத்தீவின் பெரும் அதிசயமாக கருதப்படுபவை ஒரே வடிவமைப்பில் சிறிதும் பெரிதுமான 887 கற்சிலைகள். இந்த சிலைகள் ”மோய்” என குறிப்பிடப்படுகின்றன. ரப்பா நூயி எனும் பழங்குடிகளால் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆனால் ரப்பா நூயி பழங்குடியினர்கள் எரிமலை வெடிப்பினால் இறந்துவிட்டார்கள் என்று வரலாறு கூறுகின்றது. இப்படி பல மர்மங்களை ஒளித்து வைத்திருக்கும் ஈஸ்டர் தீவை பற்றி விரிவாக பார்ப்போம்.


பசிபிக் பெருங்கடலில் தனித்து காணப்படும் ஈஸ்டர் தீவு 

ஈஸ்டர் தீவின் வரலாறு 

ஈஸ்டர் தீவின் வரலாறு மிகுந்த சர்ச்சைக்குரிய ஒன்று. இங்கு வாழ்ந்த பூர்வ குடிகள் பஞ்சம், தொற்று நோய், உள்நாட்டு போர் என்று அந்த தீவு சந்திக்காத பிரச்சினைகளே கிடையாது. இத்தீவில் தற்போது மக்கள் இல்லாமல் போனதற்கு காரணமும் இது தான். கி.பி 300-இல் இந்த தீவிற்கு குடிபெயர்ந்த பழங்குடியின மக்கள், அங்கேயே தங்க ஆரம்பித்துள்ளனர். "ஈஸ்டர் தீவு" என்ற பெயர் முதன் முதலாக இங்கு வந்திறங்கிய டச்சுப் பயணியான ஜேக்கப் ரகவீன் என்பவரால் கொடுக்கப்பட்டது. இவர் இத்தீவில் 1722ஆம் ஆண்டு ஈஸ்டர் நாளன்று வந்திறங்கினார். இத்தீவின் தற்போதைய பொலினீசியப் பெயர் "ரப்பா நூயி" (Rapa Nui). ரப்பா நூயி என்றால் "பெரும் ரப்பா" எனப்பொருள். பிரெஞ்சு பொலினீசியன் தீவுகளில்  இருந்து 1870களில்  இங்கு குடியேறிய ரப்பா மக்களின் நினைவாக இப்பெயர் இடப்பட்டது.


ஈஸ்டர் தீவில் காணப்படும் கற்சிலைகள் 

ஐரோப்பியர்களால் அழிந்த தீவு 

கி.பி 15-ஆம் நூற்றாண்டில் ஐரோப்பியர்கள் இந்த தீவிற்குள் நுழைந்தனர். முதல் ஐரோப்பியன் இந்தத் தீவில் கால்வைத்த அந்த நொடிமுதல் இவர்களின் அழிவு தொடங்கியது. அதுவரை அதிக வேற்று மனித இடையூறு இல்லாமல், இயற்கையை மட்டுமே நாடி வாழ்ந்து வந்த அந்த இனம் சூறையாடப்பட்டது. பல நாடுகளுக்கு அவர்கள் அடிமைகளாக இழுத்துச் செல்லப்பட்டனர். இது அந்த இனத்தின் எண்ணிக்கையைப் பாதியாகக் குறைத்தது. அது பலவித நோய்களை அவர்களுக்கு ஏற்படுத்தின. கொந்தளிக்கும் கடலிலும், கொதிக்கும் எரிமலைகளிலும் துள்ளி விளையாடிய அந்த இனம், பலவீனமடையத் தொடங்கியது. 


அடிமைகளாக வாழ்ந்த ரப்பா நூயி மக்கள் 

மோவாய் சிலைகள் 

வரலாற்றை ஆராய்ந்துப் பார்க்கும்போது கிடைத்த முதல் தகவலின்படி, இந்தத் தீவில் 17,500 பழங்குடியின மக்கள் வாழ்ந்துள்ளார்கள் என்பது தெரிகிறது. 1700-களின் தொடக்கத்தில் இந்தத் தீவில் 3,000 பேர் வரை இருந்ததாகச் சொல்லப்படுகிறது. 1877-ன் கணக்குப்படி 111 பேர் இருந்திருக்கிறார்கள். இன்று இந்த ஈஸ்டர் தீவு உலகின் சில ஆச்சர்யங்களில் ஒன்று. குறிப்பாக, இங்கிருக்கும் "மோவாய்" என்று சொல்லப்படும் அந்த சிலைகள். நீளமான மூக்கு, அகலமான கன்னங்கள், அடர்த்தியான புருவம், ஆழமான கண்கள், செவ்வக வடிவிலான காதுகள் மற்றும் சற்றே வளைந்த நாசி துவாரத்துடன் அவை காணப்படுகின்றன. அதாவது ஒரு மீன் தூண்டிலைப் போல. இப்படித்தான் அந்த மோவாய்கள் இருக்கும். இதுபோன்ற சிலைகளை உலகின் வேறு எந்தப் பகுதியிலுமே பார்க்க முடியாது. 101 சதுரகிமீ பரப்பளவில் இருக்கும் ஈஸ்டர் தீவில் மொத்தம் 887 மோவாய்கள் இருக்கின்றன. இதில் பாதிக்கும் மேலான சிலைகள் கடலைப் பார்த்தும், மிச்சம் தீவைப் பார்த்தது போலவும் இருக்கின்றன. 


ஈஸ்டர் தீவிலிருக்கும் மோவாய் சிலைகள் 

மோவாய் சிலையின் மர்மம் 

இந்தத் தீவை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்களுக்குப் பல ஆச்சர்யங்கள் இருந்தன. முதலில் இந்தச் சிலைகளை யார் செய்தார்கள் என்ற கேள்வி வந்தது. ஒருவேளை ஏலியன்களின் வேலையாக இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்பட்டது. பின்னர், அந்த சிலைகளை ஆராய்ந்தபோது அது அந்தத் தீவிலிருக்கும் பொருட்களைக் கொண்டே உருவாக்கப்பட்டிருக்கிறது என்பது தெரிந்தது. குறிப்பாக 834 சிலைகள் "டஃப்" என்று சொல்லப்படும் எரிமலை சாம்பலைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு மூலப்பொருளைக் கொண்டே உருவாக்கப்பட்டிருக்கின்றன. எனவே, இதைக் கண்டிப்பாக ஏலியன்கள் செய்திருக்க முடியாது என்பது நிரூபணமாகிறது.


மர்மங்கள் நிறைந்த மோவாய் சிலைகள் 

நகர்த்த முடியாத மோவாய் சிலை 

இந்தப் பெரிய சிலைகளை எப்படி தீவு முழுக்க பல இடங்களுக்கு நகர்த்தியிருப்பார்கள் என்ற கேள்வி எழுந்தது. 1980-களின் ஆரம்பத்தில் சில அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் உண்மையிலேயே அதே போன்ற சிலைகளைக் கொண்டு, நவீன தொழில்நுட்பங்கள் ஏதுமில்லாமல் அந்தக் காலகட்டத்திலிருந்த பொருட்களைக் கொண்டே அதை நகர்த்த முடியுமா என்று முயற்சி செய்து பார்த்தார்கள். ஆனால், அது முடியவில்லை. பின்னர், சில ஆராய்ச்சியாளர்கள் அதை சாத்தியப்படுத்திக் காட்டினார்கள். சிலைக்கு வலப்பக்கமும், இடப்பக்கமும் கயிறைக் கட்டி அசைத்து, அசைத்து இழுத்தார்கள். அதே சமயம், அது நிலையாக நிற்க வேண்டுமென்பதற்காக பின் பக்கமும் கயிற்றை கட்டிப் பிடித்துக்கொண்டனர். இப்படியாக முயற்சி செய்து பார்த்தபோது, சிலையை நகர்த்த முடிந்தது. இப்படியாக அந்தத் தீவு கொடுத்த பல ஆச்சர்யங்களுக்கு, பல வகைகளிலும் ஆராய்ச்சியாளர்கள் விடைகளைக் கண்டுபிடித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்