குரு வக்ர பெயர்ச்சி பலன்! எந்தெந்த ராசிக்காரர்களுக்கு நன்மை?

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு சிவனடியார் ஆகக்கூடிய எண்ணங்கள் வரும். சன்னியாசம், துறவறம் போன்றவற்றில் லயித்துப்போகாமல் ஜாக்கிரதையாக இருங்கள். மே மாதம்வரைக்கும் தனக்கு ஒரு குடும்பம் இருக்கிறது என்ற எண்ணத்தை மனதில் பதிய வைத்துக்கொண்டே இருங்கள்.

Update:2024-09-10 00:00 IST
Click the Play button to listen to article

வருகிற அக்டோபர் 9ஆம் தேதி குரு வக்ரமடைந்து 2025ஆம் ஆண்டு பிப்ரவரி 4ஆம் தேதி வக்ர நிவர்த்தி அடைகிறார். குரு வக்ரத்தினால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன நன்மைகள் நடக்கப்போகிறது? கோடீஸ்வரராகும் ராசி அமைப்புடையவர்கள் யார்? பிரிந்த ஜோடிகளில் யார் சேருவார்கள்? குழந்தை பாக்கியம் யாருக்கெல்லாம் இருக்கிறது? போன்ற பல சந்தேகங்களுக்கு பதிலளிக்கிறார் பிரம்மஸ்ரீ ராம்ஜி பரமஹம்சர்.

மேஷம்

இரண்டாம் இடத்திலிருந்த குரு மேஷத்திற்கே வருகிறார். பொன்னான தருணம் இது. 5, 7, 9ஐ பார்க்கிறார் குரு. குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமணமாகும். அப்பாவின் உடல்நிலை சரியாகும். மதுபழக்கத்தை கைவிடாவிட்டால் கல்லீரல் சேதமடையும். பெருங்குடல், சிறுநீரகம், மலக்குடல், கல்லீரல் போன்றவற்றை ஜாக்கிரதையாக பாதுகாக்க வேண்டும். வருகிற மே மாதத்திற்குள் பணி உயர்வு கிடைக்கும்.


மேஷ ராசிக்காரர்களுக்கு பொன்னான தருணம் - ரிஷப ராசிக்காரர்களுக்கு இறை நாட்டம் ஏற்படும்

ரிஷபம்

12ஆம் வீட்டிற்கு குரு வருகிறார். இலக்கு, சாதனை போன்றவற்றையே சிந்தித்து தூக்கம் கெடலாம். 1, 2, 3, 4ஆம் இடத்தை குரு பார்ப்பதால் வீடு கட்டுவீர்கள். பணி உயர்வு மே மாதத்திற்குள் கிடைக்கும். உயர் கல்வி, மரியாதை, அந்தஸ்து, கௌரவம் போன்றவை கிடைக்கும். தீரா பெருவியாதிகளால் கஷ்டப்படுபவர்களுக்கு அது சரியாகும். அடிக்கடி ஏற்பட்ட விபத்துகள் தடுக்கப்பட்டு ஆயுள் சரியாகும். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு ஆபத்தின்றி அறுவை சிகிச்சை நடந்து முடியும். இறை நாட்டம் ஏற்படும். சிவனடியார் ஆகக்கூடிய எண்ணங்கள் வரும். சன்னியாசம், துறவறம் போன்றவற்றில் லயித்துப்போகாமல் ஜாக்கிரதையாக இருங்கள். மே மாதம்வரைக்கும் தனக்கு ஒரு குடும்பம் இருக்கிறது என்ற எண்ணத்தை மனதில் பதிய வைத்துக்கொண்டே இருங்கள்.

மிதுனம்

11ஆம் வீட்டில் குரு வருகிறார். லாப ஸ்தானத்தில் குரு வரும் அதே நேரத்தில் பாதகாதிபதியும் வருகிறார். செய்கின்ற தொழிலில் சுணக்கம், பிரச்சினைகள், ஆபத்துகள் வரும். எதிலும் படித்து பார்க்காமல் கையெழுத்து போடவேண்டாம். பாதகாதிபதி 11ஆம் வீட்டில் இருந்தால் லாபம் நின்றுபோகும். இதுவரை பயன்படுத்திய வியாபார யுக்தியை மாற்றவேண்டாம். மாற்றினால் லாபம் கிடைக்காது. ஷேர் மார்க்கெட் போன்றவற்றால் பலன் கிடைக்காது. மிதுன ராசிக்காரர்கள் குரு சன்னிதானங்களான திட்டை, ஆலங்குடி, பாடி போன்ற ஸ்தலங்களுக்கு சென்று வழிபடலாம். கொண்டைக்கடலை மாலை போட்டு, மஞ்சள் நிற வஸ்திரம் செலுத்தி குரு பகவானை வணங்கிவர பிரச்சினைகள் சரியாகும்.


மிதுன ராசிக்காரர்கள் வியாபார யுக்தியை மாற்றவேண்டாம் - கடக ராசிக்காரர்களுக்கு கடன்கள் வசூலாகும்

கடகம்

ஏற்கனவே அஷ்டமத்து சனி இருக்கிறது. அவ்வாறு இருக்கையில் 10இல் குரு வருவதால் பதவி பறிபோகும். மேல் பதவியில் இருப்பவரால் அழுத்தம் கொடுக்கப்பட்டு வேலை செய்யமுடியாத சூழல் ஏற்படும். ஆனால் இதுவரை வராத கடன்கள் எல்லாம் வசூலாகும். உடல்நிலை நன்றாக இருக்கும். 10இல் குரு இருப்பதால் குருவிற்கான பரிகாரங்களை செய்வது அவசியம். வேலையில் குரு ஸ்தானத்தில் இருந்தவர்கள், அப்பா போன்றோரின் காலில் விழுந்து நமஸ்காரம் செய்து அவர்களுடைய ஆசிகளை பெற்றுக்கொண்டால் எந்த பிரச்சினையும் இல்லை. கடக ராசிக்காரர்கள் ஒவ்வொரு செயலையும் கருத்துடன் செய்யவேண்டும்.

சிம்மம்

‘ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் வீட்டில் குரு’ என்பார்கள். பணம் கொட்டும். எப்படி வருகிறது என்பது தேவையில்லை. ஆனால் அது நீண்ட நாட்கள் நிலைக்குமா என்பது கேள்விதான். எது செய்தாலும் வெற்றிதான். படம் நின்றுபோனவர்கள் எடுக்கலாம். யுடியூப், ஒலி - ஒளி பிசினஸ், வர்த்தகங்கள் என அனைத்திலும் ஜெயம்தான். காதல் வரும். அந்த காதல் திருமணத்தில் முடியும். சிம்ம ராசிக்கார்களுக்கு அனைத்து ஆசைகளும் நிறைவேறும் என்பதால் மகிழ்ச்சியாக இருங்கள்.


சிம்ம ராசிக்காரர்களுக்கு காதல் வரும் - கன்னி ராசிக்காரர்களுக்கு தாறுமாறாக செலவாகும்

கன்னி

8ஆம் வீட்டில் குரு இருப்பதால் கஷ்டங்களை மட்டுமே தருவார். அஷ்டம குரு வயிறு சம்பந்தப்பட்ட வலி, பெருங்குடல், சிறுநீரகக் கல், கல்லீரல் பிரச்சினை போன்றவற்றை கொடுப்பார். ஏற்கனவே 6இல் சனி இருப்பதால், பகைவர்களால் ஆபத்துகள் ஏற்படும். பழைய பகை, பழைய பழி வந்துசேரும். செய்த தவறுகளுக்கெல்லாம் தண்டனை அனுபவிப்பீர்கள். தாறுமாறாக செலவாகும். கைவிட்டு பணம் போகும் என்பதால் ஜாக்கிரதையாக இருங்கள். குரு வக்ர நிவிர்த்தி அடைந்தபிறகு புதிய தொழில் செய்தால் கண்டிப்பாக ஜெயிப்பீர்கள். கன்னி ராசிகாரர்களுக்கு கருத்தான எதிர்காலம் உண்டு.

துலாம்

6க்குரிய குரு 7ஆம் வீட்டிற்கு வருவதால் மனைவியுடன் சண்டை, பிரச்சினை, கருத்து வேறுபாடுகள் ஏற்படும். எனவே மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். நண்பர்களிடமும் ஜாக்கிரதையாக பழகுங்கள். நட்புதான் பெரிய பிரச்சினையாக இருக்கும். வெளிநாட்டுக்கு செல்வதில் பிரச்சினைகள் ஏற்படும். கணவன் - மனைவி பாலுறவில் பிரச்சினைகள் வரும். துலாம் ராசிக்காரர்கள் துணிந்து எதை வேண்டுமானாலும் செய்யலாம். சொத்துகள் வரும். அதற்கு குரு காலில் விழவேண்டும். குரு கோவிலுக்குச் சென்று வழிபடுங்கள்.


துலாம் ராசிக்கார்களுக்கு சொத்துகள் வரும் - விருச்சிக ராசியினர் வயிற்றை ஜாக்கிரதையாக பார்த்துக்கொள்ளுங்கள்

விருச்சிகம்

தன ஸ்தானம் முற்றிலும் நின்றுபோகும். பண விஷயங்களில் சிக்கல் ஏற்படும். பண வரவு குறையுமென்பதால் கடன் கொடுப்பதை நிறுத்திவிட வேண்டும். தெரியாத, அறியாத நபர்களிடம் பணம் கொடுக்கவே கூடாது. குழந்தைக்கான முயற்சிகளை எடுக்கவேண்டாம். குறிப்பாக, பிப்ரவரி வரை IVF செய்யவே வேண்டாம். குழந்தைகள் எப்போதும் பெற்றோரின் கட்டுப்பாட்டிலேயே இருக்கவேண்டும். குலதெய்வத்திடம் ஏதேனும் வேண்டுதல் வைத்திருந்தால் உடனடியாக அதை நிறைவேற்ற வேண்டும். மாபெரும் சாம்ராஜ்யத்தையே உருவாக்குவீர்கள் என்றாலும், வயிறு, சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் வர வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் ஜாக்கிரதையாக பார்த்துக்கொள்ள வேண்டும்.

தனுசு

குரு யோக ஸ்தானத்தில் இருக்கிறார். எப்போதோ வாங்கிப்போட்ட சொத்துக்கள் நல்ல விலைக்குப் போகும். பிப்ரவரிக்குள் மற்ற வேலைகளை விட்டுவிட்டு ஏதாவது பிசினஸ் தொடங்கி தொழில் முனைவோராகிவிடுங்கள். என்ன ஐடியா இருந்தாலும் அதற்கான முயற்சியில் ஈடுபடும்போது வெற்றிதான்.


தனுசு ராசிக்காரர்கள் பிசினஸ் தொடங்குங்கள் - மகர ராசிக்காரர்களுக்கு பணம் கொட்டும்

மகரம்

2ஆம் வீட்டில் சனி இருக்கிறார். ‘சனி கொடுத்தால் எவர் தடுப்பார்’ என்பார்கள். 4இல் குரு இருப்பதால் எதிர்பாராத விதத்தில் வீடு, மனைகள் அமையும். நாம் ஆசைப்படுவதைவிட அந்த விஷயம் நம்மை ஆசைப்படுகிறதா என்பதுதான் முக்கியம். மகர ராசிக்காரர்கள் சும்மாயிருந்தாலே அனைத்தும் தேடிவரும். கோடிகளில் பணம் வந்து கொட்டும் என்பதால் எப்போதும் ஜாலியாக இருங்கள்.

கும்பம்

3ஆம் வீட்டில் குரு மறைகிறார். பணக்கஷ்டம் ஏற்படும். பிரபலமாகும் யோகம் இருக்கும். தாழ்வு மனப்பான்மை, தற்கொலை எண்ணங்கள், வீட்டைவிட்டு போய்விடலாம் போன்ற துறவற எண்ணம் போன்றவை உருவாகும். மனநிலையில் மிகமிக கவனம் தேவை. புதிய முயற்சி செய்வீர்கள், புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். எந்த குறையும் இல்லாமல் அதிர்ஷ்டம் கரைபுரண்டு ஓடி, லாபத்தின்மேல் லாபம் வந்து சேரும். கும்ப ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் மட்டுமே கொட்டும் காலம்.


கும்ப ராசிக்காரர்களுக்கு லாபம் வந்து சேரும் - மீன ராசிக்காரர்கள் சாம்ராஜ்யங்களை உருவாக்குவீர்கள்

மீனம்

ராசியில் ராகுவும், 12இல் சனியும், 2ஆம் வீட்டில் குருவும் ஆட்சிபெற்று அமர்ந்திருக்கின்றனர். ஏற்கனவே பணம் வந்துகொண்டிருக்கிறது. இன்னும் பல வழிகளில் பணம் கொட்டப்போகிறது. சக்ரவர்த்தியாகி, பல சாம்ராஜ்யங்களை உருவாக்கப்போகிறீர்கள். நினைத்துப் பார்க்க முடியாத காரியங்களை எல்லாம் செய்வீர்கள். குடிப்பழக்கம், மனைவியை விட்டு பிரிதல், விவாகரத்து, சண்டை போன்றவை ஏற்படும். எனவே ராகுவுக்குரிய கருமாரியம்மனை வழிபடுங்கள். மீன ராசிக்காரர்கள், மேஷம், கும்பம், விருச்சிக ராசிக்காரர்களுடன் சேர்ந்து செயல்படுவது மட்டுமே சிறப்பு. 

Tags:    

மேலும் செய்திகள்