2025 பிப்ரவரி மாத ராசிபலன்கள்! - யார் யார் கவனமுடன் இருக்கவேண்டும்?

2025ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் இருக்கிறது என்பதை விளக்குகிறார் ஆன்மிக ஜோதிடர் ஆதித்ய குருஜி.

Update:2025-01-28 00:00 IST
Click the Play button to listen to article

ஆண்டுபலன்கள் சிலருக்கு வருத்தத்தையும் பலருக்கு மகிழ்ச்சியையும் கொடுத்திருந்தாலும், அவற்றுக்குள், கிரகங்களின் நிலை, அமைப்பு மற்றும் நகர்வுகளின்படி சிலநாட்களுக்கு நல்லதும், சில நாட்களுக்கு கெட்டதும் நடக்கும் என்பதால் எப்போது கவனமாக இருக்கவேண்டும்? எப்போது மகிழ்ச்சியாக இருக்கலாம்? என்பதையெல்லாம் தெரிந்து செயல்படுவது நல்லது. 2025ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் இருக்கிறது என்பதை விளக்குகிறார் ஆன்மிக ஜோதிடர் ஆதித்ய குருஜி.

மேஷம்

கடந்த 2 மாதங்களாக நீச்ச நிலையில் இருந்த செவ்வாய், கடந்த ஒரு வாரமாக அந்த நிலையிலிருந்து மாறி, வலிமையான இடத்தில் இருக்கிறார். எனவே நல்ல மாற்றங்கள் வரும். குருவும், சுக்கிரனும் இந்த மாதம்முதல் பரிவர்த்தனை ஆவதால் நட்பொருட்கள் சேரும். அவரவர் தகுதிக்கு ஏற்ப வீட்டில் நல்ல நல்ல பொருட்களை வாங்குவீர்கள். கார் போன்ற வாகனங்கள் வர வருமானம் கிட்டும். சுப செலவுகள் செய்வீர்கள். பெரிய சோதனைகள் இருக்காது. முயற்சி செய்து நடக்காதவை அனைத்தும் இந்த மாதம் 15ஆம் தேதிக்கு பிறகு கைகூடும். 40 வயதுக்கு மேற்பட்டோருக்கு கடன் தொல்லைகள் இருக்காது. அடுத்தடுத்த மாற்றங்களும் நன்மையாக இருக்கும். அரசு வேலை பார்ப்பவர்களுக்கும், அரசு வேலைக்கு எதிர்பார்த்திருப்பவர்களுக்கும், பொது ஊழியர்களுக்கும் நல்ல யோகம் அமையும். பெண்களுக்கு கூடுதல் நன்மைகள் கிட்டும். குடும்ப மன கவலைகள் தீரும். வேலையிலிருந்த இடர்பாடுகள் நீங்கும்.


மேஷ ராசிக்காரர்களுக்கு நட்பொருட்கள் சேரும் - ரிஷப ராசிக்காரர்களுக்கு கௌரவம் உயரும்

ரிஷபம்

சுக்கிரன் உச்சத்தில் இருப்பதால், தொட்டது துலங்கும். நல்ல மாற்றங்கள், முன்னேற்றங்கள், வெற்றிகள் கிடைக்கும். சட்ட சிக்கல்கள் மற்றும் வழக்குகள் சாதகமாக முடியும். குடும்ப பிரச்சினைகளை சரிசெய்யும் மனோதிடம் கிட்டும். அண்ணன், அக்கா, பங்காளிகள் போன்றோருடன் இருக்கும் சொத்து பிரச்சினைகள் நீங்கும். அந்தஸ்து, கௌரவம் உயரும். நினைத்த காரியங்களை நினைத்தது போன்றே சாதிக்க முடியும். பண வரவு, வேலையில் நிம்மதி, எதிலும் வெற்றி போன்றவை உண்டு. வயதிற்கேற்றாற்போல் இவை கிடைக்கும். மங்கள காரியங்கள் நடக்கும். வாழ்க்கைத்துணையை அடையாளம் காட்டக்கூடிய யோகம் உண்டு.

மிதுனம்

வேலை, தொழில் அமைப்புகள் பிரமாதமாக இருக்கும். பயணம் சார்ந்த விஷயங்களில் நல்ல யோக பலன்கள் உண்டு. தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். பங்குச்சந்தை, யூக வணிகத்தில் இழந்த பணத்தை திரும்பப்பெறும் வாய்ப்புகள் அமையும். எதிர்பாராத அதிர்ஷ்டமாக பண வரவு இருக்கும். ஓய்வூதிய தொகை மற்றும் கிராஜுவிட்டி போன்றவை கிடைக்கும். பணவிவகாரங்களில் அலைந்துகொண்டிருப்போருக்கு முதல் 15 நாட்களுக்குள்ளாகவே அந்த பணம் திரும்ப கிடைக்கும். நகை வியாபாரம், துணி வியாபாரம் போன்ற பெண்கள் சார்ந்த தொழில் செய்பவர்கள் எல்லாருக்கும் நல்ல வருமானம் கிடைக்கும். நன்மைகள் நிறைய கிடைக்கும். முதல் 15 நாட்களில் வரும் எதிர்பாராத பணவரவுகளால் பிற்பகுதியில் வரும் நாட்களிலும் நல்லதே நடக்கும். சொந்த ஊருக்கு போவீர்கள். கோவில் சார்ந்த ஆன்மிக யாத்திரை அமைப்புகள் வரும்.


மிதுன ராசிக்காரர்களுக்கு பண வரவு இருக்கும் - கடக ராசிக்காரர்களுக்கு உறவு நன்றாக இருக்கும்

கடகம்

மார்ச் மாதம் 29ஆம் தேதி அஷ்டம சனி விலகிவிடும். பணம் வரக்கூடிய அமைப்பு இருக்கிறது. மிகச்சிறந்த நல்ல பலன்கள் கிட்டும். கணவன் - மனைவி உறவு நன்றாக இருக்கும். மனைவியை மதிக்கும் பண்பு ஆண்களுக்கும், கணவருடன் ஒத்துப்போகும் பண்பு மனைவிக்கும் உருவாகும். புது தெம்பு மனதுக்கு கிடைக்கும். கல்வி பாக்கியம், வேலை பாக்கியம், திருமண பாக்கியம், புத்திர பாக்கியம் போன்ற அனைத்தும் வயதுக்கேற்றாற்போல் எதிர்காலம் வசந்தமாகும் விதமாக கிடைக்கும். கண்ணீர் தீரப்போகிறது. நட்பு, காதல் உறவுகளின் மூலமாக பணவரவு கிட்டும்.

சிம்மம்

எதிர்பாராத அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய நிறைவான மாதமாக இருக்கும். 15ஆம் தேதிக்கு பிறகு நல்லவை நடக்கும். முதல் 15 நாட்களில் எதிரிகள் வெல்வார்கள். கடன் இருக்காது. நோய்கள் தீரும். எதிரிகள், பிடிக்காதவர்களை பக்கத்தில் வைத்துக்கொண்டே வேலை செய்யவேண்டி இருக்கும். ஆனால் அவர்களை ஜெயிப்பீர்கள். 15ஆம் தேதிக்கு பிறகு கணவன் - மனைவி உறவில் கசப்புகள் ஏற்படும். பிள்ளைகள் பெற்றோரின் பேச்சை கேட்கமாட்டார்கள். குடும்பத்துக்குள் சிறு சிறு சங்கடங்களை சமாளிக்கவேண்டி இருக்கும். மற்றபடி வெளியிடங்களில் நன்றாக இருக்கும். செய்கின்ற தொழிலில் நன்மை கிட்டும். ஆசிரியர்கள், வக்கீல், மார்க்கெட்டிங் துறை போன்று பேசிப் பிழைப்பவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். பெண் வழி உறவுகளால் செலவுகள் வரும். ஆனால் அது நல்ல செலவாக இருக்கும்.


சிம்ம ராசிக்காரர்களுக்கு சிறு சிறு சங்கடங்கள் ஏற்படும் - கன்னி ராசிக்காரர்களுக்கு தந்தையால் செலவு வரும்

கன்னி

இந்த மாதம் மிகச் சிறப்பானது. தொட்டது துலங்கும். முதல் 15 நாட்களுக்கு கோச்சார ரீதியில் நல்ல பலன்கள் இருக்கிறது. 15 நாட்களுக்கு பிறகு மனக்கலக்கம் வரலாம். எதிரிகளோடு பயணிக்கவேண்டிய சூழல் வரலாம். ஆகாத உறவுகள் மனதை கலைக்கலாம். அப்பா, அம்மாவுடன் சண்டை சச்சரவுகள், கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். வயதான தந்தையால் செலவு வரும். அப்பாவின் உடல்நிலையில் கவனம் தேவை. சிலருக்கு பெற்றோரை பிரிந்து வேறு இடத்தில் வேலைக்கு போகவேண்டிய சூழல் ஏற்படும். பெண்களுக்குக்கூட வேறு இடத்திற்கு வேலை செல்லவேண்டிய நிலை ஏற்படும். வேலை, தொழில் நன்றாக இருக்கும். தைரியம் பிறக்கும். சகோதரர்களிடையே ஒற்றுமை, இணக்கமான உறவுகள் இருக்கும். அதேசமயம், ஜனனகால தசாபுத்தி அமைப்புகள் மோசமாக இருந்தால் கஷ்டங்கள் இருக்கும். 90% பேருக்கு நல்ல பலன்கள்தான் கிட்டும்.

துலாம்

விடியலை கொடுக்கும். புதிய கடன்கள், வளர்ச்சிக்கான கடன்கள் வாங்கவேண்டி இருக்கும். பழைய கடன்களை அடைத்துவிட்டு, புதிய கடன்களை வாங்குவீர்கள். அதில் வட்டி குறைவாக இருக்கும். நிரந்தர வருமானம் இருக்கும். விரயச்செலவுகள் நின்று எதிர்பாராத அதிர்ஷ்டம் கிட்டும். வேலையில் திருப்தியில்லாமல் இருந்தவர்களுக்கு பிடித்த, நல்ல வேலை கிடைக்கும். அற்புதமான நல்ல மாற்றங்கள் வரும். பயணங்கள் மூலமாக நன்மைகள் இருக்கும். அவரவர் தசாபுத்திக்கு ஏற்றவாறு வெளி மாநிலங்கள், வெளிநாடுகளுக்குச் செல்ல இதுவரை அனுமதி கிடைக்காதவர்களுக்கும், பாஸ்போர்ட், விசா சம்பந்தப்பட்ட விஷயங்களில் எதிர்மறையாக போனவர்களுக்கும் நல்லவைகள் நடக்கும். நல்லவிதமாக செயலாற்றினால் அதன்மூலம் முன்னேற்றங்கள் இருக்கும். கணவன் - மனைவி கருத்து வேறுபாடுகள் நீங்க ஒன்றுசேர்வார்கள். வேலையில்லை என்று சொல்லும் கணவன் - மனைவிக்கு வேலை கிடைக்கும்.


துலாம் ராசிக்காரர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் - விருச்சிக ராசிக்காரர்களுக்கு கவலைகள் நீங்கும்

விருச்சிகம்

விபரீத ராஜயோகம் கிட்டும். கடந்த சில மாதங்களாக மனம் உடைந்திருந்தவர்கள், சகோதரர்கள் விஷயத்தில் எதுவும் நடக்காமல் இருந்தவர்கள், வேலை, தொழில் வியாபரத்தில் சிக்கல் ஏற்பட்டிருந்தவர்கள், சட்டப்போராட்டங்களில் சிக்கி தவித்தவர்கள் போன்றோருக்கு நல்ல மாற்றங்கள் ஏற்படும். குழந்தைகள் பற்றிய கவலைகள் நீங்கும். அவர்களுக்கு வேலைகிடைக்கும். வைத்துக்கொடுத்த தொழில் நன்றாக இருக்கும். மங்கள காரியங்கள் நடக்கும். என்னதான் கவலை, பிரச்சினைகள் வந்தாலும் சரியாகும். எங்கெல்லாம் ஏமாந்துகொண்டிருந்தீர்களோ அவை எல்லாம் நின்றுபோகும். பெண்களுக்கு நல்ல மாதமாக இருக்கும். கோர்ட், கேஸ்களால் சிக்கியிருந்தவர்கள் ஜெயிப்பீர்கள். வெளிநாடு, வெளி மாநிலங்களில் தங்கியிருக்கும் பிள்ளைகளிடமிருந்து நல்ல தகவல்கள் வரும். அவர்கள் இதுவரை சம்மதிக்காத ஒரு விஷயத்துக்கு சம்மதிப்பார்கள். குறிப்பாக, பெண் குழந்தைகளுக்கு மங்கள விஷயங்கள் நடக்கும். முயற்சிகள் பலிக்கும். வீடு, வாகனங்கள் குறித்த விஷயங்களில் கவலைகள் தீரும். EMI பிரச்சினைகள் தீரக்கூடிய வகையில் கணவன் அல்லது மனைவி வழியில் வருமானம் வரும்.

தனுசு

மிகப்பெரிய நல்ல மாற்றங்கள் ஆரம்பிக்கும். இதுவரை கிடைக்காத சுக அமைப்புகள் கிடைக்கும். தோல்விகள் விலகும். கடந்த சில மாதங்களாக பெரிய அளவில் வருமானம் இல்லாமல் பண வரவு, தன வரவு மட்டுப்பட்டு இருந்தவர்களுக்கு அவை விலகி நல்லவைகள் நடக்கும். வாகன விஷயத்தில் சோதனைகளை அனுபவித்தவர்கள், பாதியில் நின்றுபோன வீட்டுவேலை போன்ற சூழல்கள் மாறும். குறிப்பாக, இளம்பருவத்தினருக்கு விருப்பப்பட்ட வாகனம் வாங்கும் சூழல் அமையும். கேட்டது கிடைக்கும். அம்மா வழியில் பிரச்சினை இருந்தவர்களுக்கு அவை நீங்கும். திருமணம் குறித்து வருத்தத்தில் இருந்த பெண்களுக்கு இந்த மாதம் நிம்மதியாக இருக்கும். கருத்துக்கள் ஏற்கப்படும். மாமியாரிடம் நல்ல பெயர் வாங்குவீர்கள். பெரிய அளவில் சோதனைகள் இருக்காது. பெரியவர்களுக்கு உடல்நல பிரச்சினைகள் ஏற்படும். கடன் தொல்லைகள் சிறிது இருக்கும். உன்னத மாற்றங்கள் ஏற்படக்கூடிய மாதமாக அமையும்.


தனுசு ராசிக்காரர்களுக்கு கேட்டது கிடைக்கும் - மகர ராசிக்காரர்களுக்கு நன்மைகள் நடக்கும்

மகரம்

எவ்வளவு கஷ்டப்பட்டீர்களோ அந்த அளவிற்கு சிகரத்தில் ஏறக்கூடிய மகத்தான மாற்றங்கள் நிகழும். மார்ச் 29ஆம் தேதியுடன் ஏழரை சனி பூரணமாக முடிவடையும். பெண்கள் விஷயத்தில் இருந்துவந்த இடர்பாடுகள், வழக்குகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். பெரிய அளவில் நன்மைகள் நடக்கும். தம்பி, தங்கைகளோடு இருந்த சங்கடங்கள் எல்லாம் சீராகும். தைரியம், தன்னம்பிக்கை வரும். பெண் வழி உறவுகளால் நல்லது நடக்கும். ப்ரேக் அப் செய்யும் மனநிலையில் இருந்தவர்களுக்குக்கூட அது மாறி திருமணத்தில் முடியும். பதவி உயர்வு கிடைக்கும். சம்பள உயர்வு கிடைக்கும். மாத வருமானத்தில் ஏற்ற இறக்கங்களாக இருந்தவர்களுக்கு நிரந்தர வருமானம் கிடைக்கும்.

கும்பம்

மார்ச் 29ஆம் தேதி ஜென்ம சனி விலகும். இதுவரை பணவரவு தடைபட்டவர்களுக்கு அவை அனைத்தும் சரியாகும். வீடு, வாகனம் வாங்க முடியாதவர்கள் திடீரென ஒரு முடிவை எடுப்பதன்மூலம் நல்லவைகள் நடக்கும். முதல் 15 நாட்களுக்கு பண வரவு இருப்பதை போன்றே கணவன், மனைவி, காதலன், காதலி, நட்புகள் மூலம் செலவும் இருக்கும். எனவே அதில் கவனமாக இருக்கவேண்டும். சதய நட்சத்திரக்காரர்களுக்கு மிகப்பெரிய விடுதலை இருக்கும். பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு 90% விடுதலை இருக்கும். அடுத்தடுத்து வரக்கூடிய அனைத்து மாற்றங்களும் நன்றாக இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி நன்றாக இருக்கும். வெளிநாடு போகிறவர்கள், வெளிநாட்டிலேயே வசிக்கவேண்டுமென்பவர்கள், பக்கத்து ஊர்களுக்கு போயிருப்பவர்கள் என பூர்வீக இடத்தில் இல்லாத அனைவருக்குமே இருக்கின்ற இடத்திலேயே நல்லது நடக்கும்.


கும்ப ராசிக்காரர்களுக்கு மிகப்பெரிய விடுதலை - மீன ராசிக்காரர்களுக்கு தொழிலில் சிறிது சங்கடங்கள் வரும்

மீனம்

பெரிய பாதுகாப்பு உண்டாகும். தைரியம், தன்னம்பிக்கை கிட்டும். முடிவு எடுப்பதில் இருக்கும் தடுமாற்றங்கள் நீங்கி, நல்ல முடிவு எடுப்பீர்கள். கணவன், மனைவி, நட்பு, உறவு போன்ற துரோகங்களை அனுபவித்தவர்களுக்கு நல்லவை நடக்கும். பெண் வழி உறவுகளால் சோதனை அனுபவித்தவர்களுக்கு அதில் ஒரு நிவிர்த்தி உண்டாகும். 50 வயதிற்கு மேற்பட்டோருக்கு ஜென்ம சனி அமைப்புகள் நல்லதையே செய்யும். 40 வயதிற்கு கீழ் இருப்பவர்களுக்கு வேலை, தொழிலில் சிறிது சங்கடங்கள் வரும். உறவு, நட்பு போன்றவற்றை அடையாளம் காட்டும். பணத்தில் கவனமாக இருக்கவேண்டும். இளைய பருவத்தினர் மட்டும் வேலையை விடாமல், புதிய தொழில் ஆரம்பிக்காமல், யாரையும் நம்பாமல் எதற்கும் உஷாராக இருக்கவேண்டிய மாதம் இது. கிரெடிட் கார்டு உள்ளிட்ட அவசியமில்லாத எதையும் வாங்கவேண்டாம், யாரிடமும் கொடுக்கவும் வேண்டாம். எதையும் சாதிக்கக்கூடிய உணர்வு இருக்கும். 

Tags:    

மேலும் செய்திகள்