"கோடி நன்மை தரும் ஆடி செவ்வாய் வழிபாடு" - நம்பிக்கையோடு கும்புடுங்க!

ஆடி மாதத்தின் முதல் செவ்வாய் கிழமையான இன்று அம்பிகையை வழிபடுவது கோடி நன்மைகளை கொடுக்குமாம்.

Update: 2024-07-23 09:44 GMT

ஆடியில், அனைத்து கடவுள்களும் அம்பிகைக்குள் அடக்கம் என்பதால், மாதம் முழுவதும் அம்மன் வழிபாடு சிறப்பான பலனை கொடுக்கும். குறிப்பாக ஆடி வெள்ளி, ஆடி செவ்வாய், ஆடி ஞாயிறு ஆகியவை சிறப்பான பலன்களை தரக்கூடியவை. அந்த வகையில் ஆடி மாதத்தின் ஒவ்வொரு செவ்வாய் கிழமையிலும் செய்யப்படும் வழிபாடுகள் ஒவ்வொரு விதமான பிரச்சனைகளை தீர்க்கும் என்பது நம்பிக்கை.

ஆடி முதல் செவ்வாய்

இந்த ஆண்டு ஆடி மாதத்தின் முதல் செவ்வாய் கிழமையான இன்று அம்பிகையை வழிபடுவது கோடி நன்மைகளை கொடுக்குமாம். குறிப்பாக இன்று மகாலட்சுமியை வழிபட்டால், தீராத கடன் பிரச்சனைகள் தீருமாம். கடன் என்பது நாம் மற்றவர்களுக்கு தருவதாகவோ அல்லது மற்றவர்கள் நமக்கு தர வேண்டியதாகவோ இருக்கலாம்.

எளிமையாக வீட்டிலேயே வழிபடலாம்

வீட்டை தூய்மை செய்துவிட்டு காலை அல்லது மாலை வேளையில், மகாலட்சுமி தேவியை வழிபட வேண்டும். மகாலட்சுமி படத்திற்கு மஞ்சள், சந்தனம், குங்குமம் உள்ளிட்டவற்றால் அலங்காரம் செய்து, அந்த படத்திற்கு முன் ஒரு தட்டில் 3 கிண்ணங்களை வைத்து, அவற்றில் பச்சரிசி, கற்கண்டு மற்றும் பாசிப்பருப்பை வைத்து வழிபாடு செய்தால் சக்திவாய்ந்த பலன்கள் கிட்டுமாம். பூஜை முடிந்த பிறகு, அந்த பொருட்களை கொண்டு பொங்கல் செய்து மகாலட்சுமிக்கு படைத்து, அனைவரும் அதனை பிரசாதமாக உட்கொள்ளலாம். இவ்வாறு செய்வதால் எப்பேற்பட்ட கடனும் அடையுமாம்.

பச்சரிசி மாவு வழிபாடு

பச்சரிசியை மாவாக அரைத்து, தனியாக கொஞ்சம் எடுத்து வைத்துக்கொண்டு, மீதி மாவில் மஞ்சள் கலந்து கொள்ளவேண்டும். வெள்ளை பச்சரிசி மாவு மற்றும் மஞ்சள் கலந்த பச்சரிசி மாவுகளில் மகாலட்சுமி படத்திற்கு முன்பு ஸ்வஸ்திக் சக்கரம் கோலமிட்டு, கோலத்தை சுற்றி நான்கு புறமும் குங்குமத்தால் பொட்டு வைக்க வேண்டும். இதில் வெள்ளை நிற மாவு சந்திரனையும், மஞ்சள் நிற மாவு குருவையும், குங்குமம் செவ்வாயையும் குறிப்பதாகும்.

ஸ்வஸ்திக் சக்கரத்தின் மீது பூக்களை தூவி, 108 முறை லட்சுமி அஷ்டோத்திரம் சொல்லி பூஜை செய்ய வேண்டும். நைவேத்தியமாக பால் பாயாசம் வைத்து வழிபடலாம். ஸ்வஸ்திக் சக்கரத்திற்கு முன் கனகதாரா ஸ்தோத்திரம் படிப்பதும் சிறப்பாம். இவ்வாறு வழிபட்டால் வீட்டில் மகாலட்சுமி நிரந்தரமாக குடியிருப்பால் என்பது நம்பிக்கை. வீட்டில் மகாலட்சுமியின் அருள் நிறைந்து, பண வரவு இருந்து கொண்டே இருக்குமாம். அதன்படி, மனதை தூய்மையாக வைத்துக்கொண்டு, முழு ஈடுபாட்டுடன் ஆடி செவ்வாய் பூஜை செய்து அம்பாளின் அருளை முழுமையாக பெறுவோம்.

Tags:    

மேலும் செய்திகள்