40 வயதை கடந்தவரா? - இந்த ஃபேஷியல் உங்களுக்கு உதவும்!

க்ளென்ஸிங் மற்றும் ஸ்க்ரப்பிங் இரண்டையும் சுழற்சிமுறையிலேயே செய்துகொள்ளலாம். ஃபேஷ் வாஷ் பயன்படுத்தும்போது ஜென்டிலாக பயன்படுத்தவேண்டும். ஆனால் ஸ்க்ரப்பை கொஞ்சம் அழுத்தி பயன்படுத்தினால்தான் இறந்த செல்கள் நீங்கும்.

Update:2025-01-07 00:00 IST
Click the Play button to listen to article

நாற்பது வயதை தொடுபவர்களுக்கு தோல் சுருக்கங்கள், நரைமுடி, மூட்டு வலி போன்ற பல அறிகுறிகள் தென்பட ஆரம்பிக்கும். நரைமுடிக்கு ஹேர் டை அடிப்பதும், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த சத்தான உணவுகளை எடுத்துக்கொள்வதும் அனைவருக்கும் தெரிந்ததுதான் என்றாலும் சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களை போக்குவதற்கும், அவை வராமல் தடுப்பதற்குமான வழிகள் பலருக்கும் தெரிவதில்லை. முகத்தில் சுருக்கங்கள் விழுவதை தடுத்து இளமையான தோற்றத்தை பெறுவதற்கு ஒயின் ஃபேஷியல் சிறந்தது என்கிறார் அழகுக்கலை நிபுணர் பிரியா. இந்த ஃபேஷியல் வயதானவர்களுக்கு மட்டுமல்லாமல் சரும கருமை, முகப்பரு போன்ற பிரச்சினைகள் இருப்பவர்களுக்கும் நல்ல ரிசல்ட்டை தரும். தளர்ந்த சருமத்தை இறுக்கவும், சருமத்திற்கு புத்துணர்ச்சியை தரவும் ஒயின் உதவுகிறது. எனவே சாதாரணமாக ஒயினை முகத்தில் தடவி வந்தாலே நல்ல ரில்சட்டை கண்கூடாக பார்க்கலாம் என்கிறார் அவர். 40 வயதை கடந்தவர்களுக்கு சிறந்த ரிசல்ட்டை தரக்கூடிய ஒயின் ஃபேஷியல் வித் தெர்மோ பேக்கை செய்துகாட்டுகிறார்.

ஒயின் ஃபேஷியல்

ஃபேஷியல் செய்வதற்கு முகத்தை முதலில் டீப் க்ளென்சிங் செய்யவேண்டும். பொதுவாக மற்ற ஃபேஷியல் செய்யும்போது தண்ணீர் பயன்படுத்தப்படும். ஆனால் ஒயின் ஃபேஷியலுக்கு முழுவதும் ஒயின் மட்டுமேகூட பயன்படுத்தலாம்.

க்ளென்சிங் செய்தபிறகு இரண்டு கைகளிலும் ஒயினை நன்றாக எடுத்து அதை முகத்தில் அப்ளை செய்து மசாஜ் கொடுக்கவேண்டும். இதை ஈரமான காட்டனால் நன்கு துடைத்துவிட வேண்டும்.


டீப் க்ளென்ஸிங் செய்து ஈரக் காட்டனால் முகத்தை துடைத்தல்

அடுத்து ஸ்க்ரப்பர் பயன்படுத்த வேண்டும். ஸ்க்ரப்பை பொருத்தவரை பொதுவாக இரவு நேரங்களில் பயன்படுத்தலாம். தினமும் வெயிலில் செல்பவர்கள், கண்களை சுற்றி கருவளையம், கழுத்தில் கருப்பாக இருத்தல் போன்றோர் ஸ்க்ரப் செய்யும்போது சருமம் கருமையாவதை தடுக்கலாம். க்ளென்ஸிங் மற்றும் ஸ்க்ரப்பிங் இரண்டையும் சுழற்சி முறையிலேயே செய்து கொள்ளலாம். ஃபேஸ் வாஷ் பயன்படுத்தும்போது ஜென்டிலாக பயன்படுத்தவேண்டும். ஆனால் ஸ்க்ரப்பை கொஞ்சம் அழுத்தி பயன்படுத்தினால்தான் இறந்த செல்கள் நீங்கும்.

ஸ்க்ரப் செய்து முடித்தபிறகு, ஈரக்காட்டனால் அதை நன்கு துடைத்துவிட்டு, ஸ்டீம் செய்யவேண்டும். வீட்டில் ரெகுலராக ஸ்டீம் செய்யும்போது ப்ளாக் ஹெட்ஸ் மற்றும் வொய்ட் ஹெட்ஸ் சருமத்தில் சேராமல் பார்த்துக்கொள்ள முடியும். மேலும் சருமம் ஃப்ரஷ்ஷாக இருப்பதையும் உணரமுடியும். நிறையப்பேருக்கு தொடர்ந்து ஸ்டீம் செய்யலாமா என்ற சந்தேகம் இருக்கும். வீட்டிற்குள்ளேயே இருப்பவர்கள் அப்படி செய்ய தேவையில்லை. ஆனால், அடிக்கடி வெளியே செல்பவர்கள், வெயிலில் இருப்பவர்களுக்கு சருமம் கருமையாகும் என்பதால் ரெகுலராகவே செய்யலாம்.


ஸ்டீம் செய்துகொண்டே ப்ளாக் ஹெட்ஸ் மற்றும் வொய்ட் ஹெட்ஸை நீக்குதல்

10 நிமிடங்கள் ஸ்டீம் செய்தபிறகு, மூக்கு, தாடை, நெற்றிப் பகுதிகளில் இருக்கும் ப்ளாக் ஹெட்ஸ் மற்றும் வொய்ட் ஹெட்ஸை நீக்கவேண்டும்.

சருமம் இறுகவேண்டும் என்ற காரணத்திற்காகத்தான் நிறையப்பேர் ஒயின் ஃபேஷியல் செய்கிறார்கள். ஃபேஷியலுடன் ஹை ஃப்ரீக்வென்சி கொடுக்கும்போது சருமம் நன்றாக இறுகும். குறிப்பாக, கண்களுக்கு கீழுள்ள சுருக்கங்களுக்கு ஹை ஃப்ரீக்வென்சி கொடுக்கலாம்.

அதன்பிறகு, ஃபேஷியல் செய்வதற்கு என்னென்ன ஸ்டெப்ஸ் செய்கிறோமோ அவை அனைத்தையும் செய்யும்போது கூடவே தண்ணீருக்கு பதிலாக ஒயினால் நன்கு மசாஜ் கொடுக்கவேண்டும்.


ஷீட் மாஸ்க் போட்டு தெர்மோ பேக்கை அப்ளை செய்தல்

சருமத்தை இறுக்குவதற்கு அடுத்து தெர்மோ பேக் போடலாம். தெர்மோ பேக்கை நேரடியாக முகத்தில் போடக்கூடாது என்பதால் ஒரு மாஸ்க் ஷீட்டை (க்ளோஸ்) எடுத்து அதை ஒயினில் தோய்த்து முகத்தில் போடவேண்டும். அடுத்து தெர்மோ பேக் பவுடரை ஒயினில் கலந்து மாஸ்க் ஷீட்மீது கீழிருந்து மேலாக போடவேண்டும்.

10 முதல் 15 நிமிடங்கள் இதை அப்படியே வைத்திருந்து பேக்கை எடுத்துவிட்டு, ஈரக்காட்டனால் துடைத்துவிடலாம். இந்த ஃபேஷியலை வீட்டிலேயேகூட செய்துகொள்ள முடியும். இதனால் சருமம் இறுகி, பளபளப்பாகவும் இளமையாகவும் தோற்றமளிக்கும்.

எல்லா சூப்பர் மார்க்கெட்களிலுமே ரெட் ஒயின் கிடைக்கின்றது. அப்படி கிடைக்காவிட்டால் திராட்சையை அரைத்து, ஒரு வாரம் வைத்திருந்து, ஒயினாக பயன்படுத்தலாம். கண்களை சுற்றி கருவளையம் இருப்பவர்கள் இரவு தூங்க போகும் முன்பு ஒயினால் மசாஜ் செய்துவிட்டு தூங்கப்போகலாம்.

Tags:    

மேலும் செய்திகள்